September 23, 2021

இதய நோயுள்ள பெண்களைப் பாதுகாக்கும் பழங்கள்!

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும். இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.
இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்று கண்டறிந்துள்ளார்கள். அண்மையில் கூட அமெரிக்காவில் இதய நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் எடுத்துக்கொண்டால் பெண்களுக்கு இதய நோய்கள் உருவாகும் ஆபத்து குறைவு என்று கூறுகின்றனர். 20 வருடங்களுக்கு பின்னர் ஒப்பிடும்போது பழங்கள் அதிகம் உண்ணும் பெண்களுக்கு குறைந்த பிளேக்-அதிகரிப்பு தன்மைகள் தமனியில் உருவாகின்றன. இதனால் இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை தவிர்க்கமுடியும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.
Fruit lady
இந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் இந்த நன்மை ஆண்களுக்கு அனுகூலம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. பிளேக்-அதிகரிப்பு வாழ்நாள் முழுவதும் உருவாகக்கூடிய தன்மைகள் ஆகும். ஆனால் இதனை சிறந்த டயட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தமுடியும் என்று அமெரிக்காவை சேர்ந்த ஒரு இதயம் சார்ந்த மருத்துவர் தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சியில் 20 வயதில் பெண்கள் ஒரு நாளைக்கு 2000 கலோரி டயட் மேற்கொண்டால் 40 வயதின் போது தமனியில் பிளேக்-அதிகரிப்பு தன்மைகள் 40சதவிதம் குறைந்துள்ள நிலையில் இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை எல்லோரும் தினமும் கட்டாயமாக பழங்கள் சாப்பிட வேண்டும்.பல வைட்டமின்கள் சத்துக்கள் இந்த பழங்களில் இருந்து கிடைக்கிறது . பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி பழங்களுக்கு உண்டு.

பழங்களில் இரும்புச் சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன. எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடக்கூடிய பழம் ஆரஞ்சுப் பழம். இது உடலுக்கு அதிக புத்துணர்ச்சியையும், வலுவையும் தருகிறது.

கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு இந்த ஆரஞ்சுப் பழம் மிகவும் நல்லது. இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு மிகவும் சிறந்தது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி அதிகம் இருப்பதால், உடல் சோர்வை உடனடியாக போக்கும் தன்மை இதற்கு உண்டு. சில வகை பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஆப்பிள் , அன்னாசி , பலா, வாழை என பழங்கள் உண்டு.என்ன பழம் என்றாலும் ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிட வேண்டும்.கடையில் விற்கும் பானங்களை குடிப்பதை விட வீட்டில் நாமே நல்ல சுத்தமாக பழங்களை ஜூஸ் அடித்து குடிக்கலாம்.தாகமும் தீரும்.

உடம்புக்கு மிகவும் நல்லது. சப்போட்டா பழத்தில் அதிகளவில் இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

பப்பாளிப் பழத்தை துண்டுகளாக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் அஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாய்ப்பால் அதிகம் சுரக்க பப்பாளிப் பழம் மிகவும் பயன்படுகிறது. ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு ருசி இருக்கும் . ஒன்று புளிப்பு தன்மை கொண்டதாகவும், மற்றொன்று இனிப்பாகவும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

காய்ச்சல் இருக்கும் போது பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் போது வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் நீர்ச் சத்து அளவு குறையும். இதனால் ஆப்பிள் , ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடலாம். உணவிற்கு முன்பு ஒரு ஆப்பிள், (அ)வெள்ளரிக்காய், (அ) தக்காளி சாப்பிடுங்கள்.