September 18, 2021

இணையதளங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்களை வெளியிட புதிய விதிமுறை!

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் நிலையில், அரசியல் விளம்பரம் தொடர்பாக இந்த வலைதளங்களுக்கு புதிய விதிமுறைகள் அடங்கிய விரிவான வழிகாட்டு நெறிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக முக்கிய சமூக வலைதளங்களுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி.”தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு இன்டெர்நெட் அடிப்படையிலான அனைத்து சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
social-media-politics mar 21
டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களை இளைய தலைமுறையினர் அதிகளவில் பார்க்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, இந்த சமூக இணைதளங்களில் அரசியல் கட்சியினர் பெருமளவில் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர். டெல்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலின்போது, சமூக இணையதளங்களில்தான் பெரும்பாலான கட்சிகள் விளம்பரங்களை வெளியிட்டன. அது வாக்காளர்களையும் எளிதில் சென்றடைந்தன. இதனால், இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக இணையதளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து இணையதளங்களில் விளம்பரங்களை வெளியிடுவது தொடர்பாக விரிவான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முக்கிய விதிமுறைகள் வருமாறு: விளம்பரங்களை வெளியிடும் முன்பு அதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரங்களை வெளியிடும் இணையதளங்கள், அதுகுறித்த கணக்கை முறையாக பராமரிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கேட்கும்போது, அதை அளிக்க வேண்டும். விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பாக, அதில் உள்ள வாசகங்கள் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானதாகவோ, சட்டத்துக்கு புறம்பானதாகவோ அல்லது கெட்ட நோக்கத்துடனோ இல்லை என்பதை இணையதள நிறுவனங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து முக்கிய சமூக இணையதள நிறுவனங்களுக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இயக்குநர் திரேந்தர் ஓஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் இதுகுறித்து,””இணையதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை கண்காணிப்பது என்பது மிக சிரமமான பணி. ஆனால், எந்த அளவுக்கு அவற்றை கண்காணிக்க முடியுமோ அந்த அளவுக்கு விரிவான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இதேபோல் பணம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதை கண்காணிப்பதும் மிக சிரமமான காரியம். இந்த விஷயத்தில் ஊடகங்கள் சுய பொறுப்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.

Ads on social media under EC watch
*******************************************************
The Election Commission has directed all social networking sites to scrutinise the content displayed by them to ensure that they do not violate the model code of conduct. The EC guidelines issued Tuesday also said no political advertisement will be displayed on such sites without a pre-certification.