September 20, 2021

‘இணைந்து வெல்வோம்’ -ஜெகன்மோகன் ரெட்டியிடம் கருணாநிதி!

ஆந்திரத்தின் அடுத்த முதல்வர் நீங்கள்தான் என்று ஜெகனுக்கு கருணாநிதி வாழ்த்துக் கூறியுள்ளார்.மேலும், மக்களவைத் தேர்தலில் இரு கட்சியும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஜெகன்மோகன் ரெட்டியிடம் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாராம்..
dec 6 - karunanidhi jagan
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புதன்கிழமை சென்னை வந்தார்.சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியைச் சந்தித்து சுமார் 40 நிமிஷங்களுக்கு மேல் நீடித்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவைத் திமுக குழு உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மட்டுமே உடனிருந்தனர்.

ஒருங்கிணைந்த ஆந்திரத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு கேட்ட நிலையில், அரசியல் விவகாரம் தொடர்பாகவும் கருணாநிதியிடம் அவர் பேசியுள்ளார்.அப்போது, ஆந்திரத்தில் உங்கள் (ஜெகன்மோகன் ரெட்டி) பொதுக்கூட்டங்களுக்குக் கூடும் கூட்டத்தைப் பார்க்கும்போது பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.

ஆந்திரத்தின் அடுத்த முதல்வர் நீங்கள்தான் என்று ஜெகனுக்கு கருணாநிதி வாழ்த்துக் கூறியுள்ளார்.மேலும், மக்களவைத் தேர்தலில் இரு கட்சியும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கருணாநிதி கூறியதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனை ஜெகன்மோகன் ரெட்டியும் ஏற்றுக்கொண்டாராம்.