October 18, 2021

இஞ்சி இடுப்பழகி-யை பார்க்கலாமா? – விமர்சனம்..!

முன்னொரு காலத்தில் நம்ம முருங்கைக்காய் டைரக்டர் கே பாக்யராஜ் ‘சின்ன வீடு’ என்ற டைட்டிலில் வழங்கிய நாட்தான் கதை. ஆனால் கோலி,டோலி,போன்ற வுட்களில் ஃதி பிட்டஸ்ட்’ ஹீரோயின் மற்றும் ரியல் யோகா டீச்சரான அனுஷ்கா-வை கலகலப்பாக சில மெசெஜ்களை சொல்ல முயன்றிருப்பதுதான் இஞ்சி இடுப்பழகி
cine nov 28
அனுஷ்காவு அம்மா,தம்பி, தாத்தான்னு ஆர்டினரி வாழ்க்கை நட்த்திக்கிட்டிருக்கார். இவருக்கிஉ கல்யாண வயசான நிலையில் இவரை நேர்லே பார்க்க வர்ற மாப்பிள்ளை எல்லாம் சைஸ்-ஸைக் கண்டு, ‘தெறிச்சு”ஓடிடுறாங்க. இதுனால கல்யாணத்து மேலேயே வெறுப்பா இருக்கிற சமயம் ஆர்யா பொண்ணுப் பார்க்க வர்றாரு. இப்பத்திய ட்ரண்டாகி விட்ட டாகுமெண்ட் பிலிம் டைரக்டராக ஆகணுங்கற லட்சியத்தில இருக்கிற ஆர்யாவும்,கல்யாண வெறுப்பில இருக்கும் அனுஷ்காவும் தனியே பேசி திருமணத்தில் இருந்து எஸ் ஆகி இருவரும் ஜஸ்ட் ப்ரண்ட்ஸாத் தொடர்கிறார்கள்.

இதுக்கிடையிலே தன்னை ஆர்யா கூட அவாய்ட் பண்ற இந்த குண்டு உடம்பை தொலைச்சிடலாம் என்று முடிவு செய்து பிரகாஷ்ராஜ் வைத்திருக்கும் உடனடி எடைக்குறைப்பு நிறுவனத்தில் எடையைக் குறைக்கப் பணம் கட்டி சேர்கிறார்.அதையொட்டி நடக்கும் கோல்மால்களை கேஷூவலாக காண்பிக்கிறார்கள். கூடவே அங்கு அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக எடை குறைக்கப் பயிற்சி எடுக்கும் அனுஷ்காவின் தோழி ஒருவருக்கு இந்நிறுவனத் தால் கிட்னி ஃபெயிலியர் ஆக, அனுஷ்கா தட்டிக்கேட்கிறார். அப்போது அலட்சியமாக பேசும் பிரகாஷ் போக்கை மாற்ற ஹெல்ப் பண்ணும் ஆர்யா மீது அனுஷ்காவிற்கு காதல் வருகிறது .அதே சமயம் ஆர்யாவின் லண்டன் தோழியும் அவருக்கு ப்ரோப்போஸ் செய்ய சேர்ந்தார்களா இல்லையா? அந்தப் போலி நிறுவனம் என்னவாயிற்று? என்பதுதான் க்ளைமாக்ஸ்

அப்பப்பா..அனுஷ்கா,ஆர்யா, ஊர்வசி என எல்லோரையும் ப்ரண்ட்லியாக்கி படத்தை எடுத்துள்ளார் டைரக்டர். ஆனால் நேட்டிவிட்டி என்பதாலோ என்ன்னவோ அடிக்கடி தெலுங்கு டப்பிங் படம்தானே என்று நினைப்பு வந்து விடுகிறது..மொத்தத்தில் இந்த இடுப்பழகியை. தாராளமாக ஃபேமிலியோடு போய் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம்!
i