October 20, 2021

ஆவின் பால் விலையேற்றத்தை எதிர்ப்பதுதான் அநியாயம்!

ஆவின் பால் விலை ஏற்ற சோதனை என்று பலர் புலம்ப – உலகத்த்திலே மிகவும் குறைவான விலையில் பால் வழங்கிய ஒரு நிறுவனமும் இந்த ஆவின் தான் என்ற சாதனையும் பார்க்க வேண்டும். அது எப்படி உலகிலெ மிக குறைந்த விலை என்றால் 2011 வரை பால் விலை – கொள்முதல் விலைக்கே கொடுத்து வந்த ஆவின் 2011 விலையேற்றம் செய்த பிறகும் இந்த உலகின் மிக குறைந்த பால் விலை ரெக்கார்ட்டை தக்க வைத்திருந்தது மட்டுமில்லாமல் – உலகிலே அதிக பால் உற்பத்தி செய்யும் ஒரே நாடு – இந்தியா – அதுமட்டுமல்ல – இந்தியாவிலே அதிக பால் உற்பத்தி செய்வது தமிழகம் மட்டும் தான் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்………...?
ravi aavin
இதை பற்றி ஒரு அனலைஸிஸ்…….….

ஆவின் இன்று நேற்று தொடங்கபட்ட நிறுவனம் அல்ல 56 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பால் வளத்துறை இன்று தமிழக அரசின் நிறுவனம். தமிழகத்தில் தினமும் சுமார் 1 கோடி 47 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது அதில் 78 லட்சம் லிட்டர் ஆவின் கையாளுகிறது. இந்த பால் விலை இன்று பத்து ரூபாய் ஏற்றும் முன் 2 ரூவாயை ஏற்கனவே ஏற்றி கொடுத்து கொண்டிருக்கிறது ஆவின் நிறுவனம் பால் கறவையாளர்களுக்கு. அது போக இந்த விலையேற்றத்தில் இன்னும் 5 ரூபாய் ஏற்றியது போக மிச்சம் அரசுக்கு வருவது 3 ரூபாய்கள் மட்டுமே.

இது நல்லதா என்றால் நல்லது தான். ஏன் என்றால் தமிழகத்தின் மார்க்கெட் ஷேர்படி ஆவின் பால் 21% சதவிகிதம் மட்டுமே.  ………83% சதவிகிதம் ஆவின் வசம் இருந்த பால்.மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமா குறைந்தது இரண்டு விஷயத்தில்…. 1. பால் தேவை அதிகரிக்க அதனால் பர்சென்டேஜ் குறைவானது. 2. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து ஆவின் பால் ச்ப்ளை குறைந்த காரணத்தினால் தான் இந்த பால் பூத்துகள் காலை 7 மணிக்கே காலியாகிவிடும் – ஆனால் நாள் முழுவதும் அண்ணாச்சி கடைகளிலும் – தனியார் ஹோட்டல்களிலும் – டீக்கட்டைகளிலும் இருப்பது தான் காரணம்.

காறி துப்பும் அளவுக்கு காப்பி டீ சைனடு குப்பியை விட சற்றே பெரிதான சைஸில் கொடுக்கும் காப்பி டீ விலை 7 முதல் 10. இவர்கள் தான் இந்த மானியத்தை உறிஞ்சி ஆவினையும் – பால் கறவையாளர்களையும் நஷ்டம் செய்கின்றனர். உண்மையா பால் பயனீட்டாளர்கள் என்று பார்த்தால் 9% சதவிகித தனிமனிதர்கள் தான். இதனால் நாய்ர் ஆகட்டும் அண்ணாச்சி ஆகட்டும் அரசு மானிய பாலை வாங்கி உயர் விலைக்கு விற்கின்றனர். இதில் சில நிறுவனங்கள் கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கின்றன. சில தனியார் தயிர் மற்றூம் பண்ணீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றூம் அனேக கொள்ளை விலை விற்கும் ஸ்வீட் ஃபேக்டரிக்குத்தான் இந்த பால் அதிகம் செல்லுகிறது.

நல்லது என்ன? – அரசு நிறுவனம் என்று ஒன்று இருந்தால் தான் தனியார் பால் விலை ஒரு 10 – 15% மார்ஜினில் இருக்கும் சாத்தியம் – இல்லையெனில் ஆவின் நஷ்டத்தில் மூடப்படும் நிலைமை அல்லது ஏதாவது ஒரு தனியார் நிறுவனம் கையகபடுத்தி நாளை பால் 100 ரூவாய் என்றாலும் வாங்கித்தான் ஆகவேண்டும். அரசி தலையிட்டால் – மினரல் வாட்டர் கொள்ளையர்கள் போல் ஸ்டிரைக் செய்து சாவட்டிப்பார்கள். இன்று முதலை கண்ணீர் சிந்தும் பாஜாக – காங்கிரஸ் அவர்கள் ஆளும் மற்ற மானிலங்களில் இந்த விலைக்கு முதல்ல விற்க சொல்லிவிட்டு அதற்க்கு அப்புறம் போராட்டம் பொரி விளங்கா செய்யலாம். இன்று தமிழகத்தில் அதிகம் விறகபடும் தனியார் பாலில் இரண்டு முக்கிய விஷயங்கள்…

அந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் / மில்கி மிஸ்ட் / ஆரோகயா பால் நிறுவங்கள் தான் கோலோச்சுகின்றன. ஆனால் இந்த நிறுவங்கள் 100 சதவிகத ஒரிஜினல் பால் தருவதில்லை 60% பால் பவுடர் மாயம் தான். மில்கி மிஸ்ட் வகை இதில் 80% சதவிகதம் வரை உபயோகிக்கறது. அதனால் இங்கு பொங்கும் பலர் ஒன்று ஆவின் வாங்கி பயன்படுத்துவதில்லை அல்லது இந்த நாட்டிலே இல்லை என்பது தான் உண்மை.. அரசு 34க்கு ஏற்றவில்லை 32 ரூவாய் தான் 34 சில்லரை விலை அதாவது கார்ட் இல்லாமல் வாங்கும் தினசரி அன்றாடம் காய்ச்சிகளுக்குத்தான் அந்த விலை. இந்த ஆவின் அரசு விலையை விட எந்த நிறுவனம் அரசு உலகில் எங்கு பால் கொடுக்கிறது என்று தெரிவித்தால் நானும் ஹேப்பியா கேட்டுக்குவேன்.

அதனால் இதுவரை மானியத்தில் நாயர் / அண்ணாச்சி மற்றும் பல ஹோட்டல் தொழிலதிபர்களை மானியத்தில் வளர்த்து விட்ட கோபாலபுரத்து அய்யாவையும் – போயஸ் அம்மாவையும் பாராட்டத்தான் வேண்டும்…சினிமாவுல கடைசி சீன்ல மட்டும் விவாசியிக்காக பரிதாபப்படும் நீங்கள் 7 ரூவாய் இந்த விலையேற்றத்தில அடிமடியில் கைவைப்பது நியாயமே இல்லை….

World’s Cheapest Milk Price by Aavin – 56 Years Record and Rs 10 Hike Detail Analysis –