October 25, 2021

ஆல்ரவுண்டர் யுவராஜ சிங் மீண்டும் இந்திய அணியில் தேர்வு!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில், ஆல்ரவுண்டர் யுவராஜ சிங் மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 9 மாதங்களுக்கு பிறகு அவர் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
sep 30 - yuvaraj singh
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வருகிற 10–ந்தேதி முதல் நவம்பர் 2–ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி, மற்றும் 7 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

10–ந்தேதி 20 ஓவர் போட்டி ராஜ்கோர்ட்டில் நடக்கிறது. ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி 13–ந்தேதி புனேவில் தொடங்குகிறது. கடைசி மற்றும் 7–வது ஒருநாள் போட்டி நவம்பர் 2–ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.இதில் 20 ஓவர் போட்டி மற்றும் முதல் 3 ஒருநாள் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று சென்னையில் அறிவிக்கப்பட்டது.

யுவராஜ்சிங் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். 9 மாதங்களாக அணியில் இடம் பெறாமல் இருந்த அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் தேர்வு பெற்றார்.வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 20 ஓவர் போட்டியிலும் திறமையாக நிரூபித்தார்.கடைசியாக அவர் கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தார்.

மேலும் அம்பதி ராயுடு, ஜெய்தேவ் உன்கட் இடம் பிடித்தனர். அதே சமயம் தினேஷ் கார்த்திக், புஜாரா, ரகானே, மொகித் சர்மா, பர்வேஷ் ரசூல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

15 பேர் கொண்ட இந்திய அணி விவரம் வருமாறு:–

டோனி (கேப்டன்), வீராட் கோலி, ஷிகார் தவான், ரோகித் சர்மா, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஸ்ரா, அம்பதி ராயுடு, முகமது சமி, ஜெய்தேவ் உன்கட்.

Yuvraj Singh returns for Australia series
***********************************************************
Yuvraj Singh has made an expected return to the 15-member Indian squad for the only T20 and the first three ODIs of the seven-match series against Australia. However, there was no place for discarded seniors Virender Sehwag, Gautam Gambhir, Zaheer Khan and Harbhajan Singh.