September 20, 2021

ஆலந்தூர் இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் ஞாநி

ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அண்மையில் அக்க்ட்சியில் இணைந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது.
Writer_Gnan_Sankaran_
ஞாநி, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததும், அவர் தென்சென்னை தொகுதியின் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியினர் முட்டுக்கட்டை போட்டதாக அக்கட்சிக்குள்ளேயே சிலர் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், ஞாநி ஆல்ந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான அறிவிப்பை, சென்னை – பெருங்குடியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலப் பிரச்சாரக் குழு தலைவர் டேவிட் பருண்குமார் வெளியிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 24-ல் இடைத் தேர்தல் நடக்கிறது.கடந்த முறை ஆலந்தூரில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.