September 29, 2021

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூன் மாதம் 27!

சென்னை ஆர்.கே.நகர் (ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.வெற்றிவேல். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பி.கே. சேகர்பாபுவை 31 ஆயிரத்து 255 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.இந்த நிலையில், வெற்றிவேல் திடீரென்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
jaya may 26
அவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ப. தனபால் ஏற்று கொண்டார். வெற்றிவேல் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது குறித்த அறிவிப்பு அரசு கெசட்டிலும் வெளியிடப்பட்டது சட்டசபையின் பதவிக்காலம் ஓராண்டுக்கும் மேலாக இருக்கும் போதே ஆர்.கே.நகர் தொகுதி காலியாகி விட்டதால் அந்த தொகுதிக்கு தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலை நடத்தித்தான் ஆகவேண்டும். முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் மாதம் 27 ந்தேதி நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்து உள்ளார்.

ஆர்.கே நகர் சட்டசபை இடைதேர்தலுக்கான ஓட்டு பதிவு வருகிற ஜூன் 27ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 3ந்தேதி நடைபெறுகிறது. ஜூன் 10ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள். வேட்பு மனுக்கள் ஜூன் 11ந்தேதி பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும். ஜூன் 13ந்தேதி வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். அதன் பின் ஓட்டு பதிவு ஜூன் 27ந்தேதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை ஜூன் 30ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.