September 18, 2021

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; 50 பேர் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 50 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் வியாழக்கிழமை (ஜூன் 11) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
jaya jun 11
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு ஜூன் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் புதன்கிழமை (ஜூன் 10) நிறைவடைந்தது. அதிமுக சார்பில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதா தனது வேட்புமனுவை கடந்த 5 ஆம் தேதியன்று தாக்கல் செய்தார்.

இடைத்தேர்தலில் போட்டியிட கடைசி நாளான புதன்கிழமை மட்டும் 15 பேர் மனு தாக்கல் செய்தனர். இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 50 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.இடைத் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் அனைத்தும் வியாழக்கிழமை (ஜூன் 11) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 13 ஆம் தேதி கடைசியாகும்.