September 20, 2021

ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெ. போட்டியிட முடிவெடுத்தது ஏன்?

அதிமுகவின் ஆட்சி காலம் இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், தமிழக முதல்வராக ஜெயலலிதா மறுபடியும் பதவியேற்க உள்ளார். இதையடுத்து அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரியாத நிலையில் பல்வேறு எம் எல் ஏ-க்கள் ராஜினாமா செய்ய தயாராக இருந்தனர்.
jaya election green may 17
எதிர் வரும் 22ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு. அதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க ஜெயலலிதா உரிமை கோரி அன்று மாலையே பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்கேநகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் இன்று ராஜினாமா செய்துள்ளார். வெற்றிவேலின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபால் உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளதாக சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். புதிய முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வசதியாகவே வெற்றிவேல் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராதாகிருஷ்ணன் நகரில் ஆண் வாக்காளர்கள் 1,18,960 :பெண் வாக்காளர்கள் 1,21,508 :மற்றவர்கள் 75 :ஆக மொத்தம் 2,40,543 என்றும் பெண் வாக்காளர்கள் அதிகமிருப்பதாலும் மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14 என மொத்தம் ஒன்பதே வார்டுகள் உள்ள தொகுதி என்பதாலும் ஜெயலலிதா இங்கு போட்டியிட முடிவு செய்தார் என்று தெரிகிறது.