October 16, 2021

ஆர்மி மெடிக்கல் காலேஜில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் பணி வாய்ப்பு!

புனேயிலுள்ள ராணுவ மருத்துவக்கல்லூரியில் (AFMC) MBBS படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் இந்திய ராணுவ மருத்துவமனைகளில் டாக்டராக பணியமர்த்தப்படுவர்.
army medical
பணி: எம்பிபிஎஸ். கால அளவு:4½ வருடம் படிப்பு மற்றும் ஒரு வருடம் பயிற்சி (internship).

மொத்த இடங்கள்: 130. ஆண்கள்-105. பெண்கள்-25.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிளஸ் 2 பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல். உயிரியல் பாடங்கள் அடங்கிய பி.எஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி.

வயது: பிளஸ் 2 விண்ணப்பதாரர்கள் 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் CBSE ஆல் அகில இந்திய அளவில் நடத்தப்படும் AIPMT-2015 நுழைவுத்தேர்வின் அடிப்படையில் படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர்.

AIPMT தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.afmc.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். AIPMT-2015 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டுமே புனே ராணுவ மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.250/- இதை ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்தவும். இதற்கான செலானை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.www.afmc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

கட்டணம் செலுத்த கடைசி நாள்: 26.5.2015

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:18.05.2015.