September 27, 2021

ஆரம்பிச்சாடங்கய்யா.. லாரி ஸ்ட்ரைக்கை ஆரம்பிச்சுட்டாங்கய்யா!

மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரியுடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து லாரிகள் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி தொடங்கியது.இதையடுத்து தமிழ்நாட்டில் 2 லட்சத்து 93 ஆயிரம் லாரிகளும், வெளிமாநிலங் களுக்கு செல்லும் 89 ஆயிரத்து லாரிகளும், 7 ஆயிரத்து 400 டிரெய்லர் லாரிகளும் முடங்கியது.
loories strike. start
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும், லாரி வாடகையில் டி.டி.எஸ். பிடித்தம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் இந்தியா முழுவதும் காலவரை யற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.இதுதொடர்பாக டெல்லியில் அகில இந்திய மோட்டார் போக்கு வரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நேற்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் நடத்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

கூட்டம் முடிந்ததும் நிதின் கட்கரி நிருபர்களுக்கு பேட்டி அளித்த.போது, “அகில இந்திய லாரி உரிமையாளர்கள் காங்கிரஸ் 3 கோரிக்கைகளை முன்வைத்தது. அதில் ஒன்று சுங்கச்சாவடிகளில் லாரிகள் நுழைவுக் கட்டணத்தை செலுத்துவதற்கு எடுத்துக் கொள்ள நீண்ட காலதாமதம் ஆகிறது என்பதாகும்.இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் ஆவன செய்து கொண்டிருப்பதாகவும் சுங்கச் சாவடிகளின் இயங்கும் முறையை நவீனப்படுத்துவதில் விரைந்து கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. சுங்க சாவடி கட்டணங்கள் மின்னணுவாக்கத்தில் நடைமுறைப் படுத்தும் போது, இதுபோன்ற காலதாமதங்களை குறைக்கலாம். மாநில அரசுகளுக்கு எந்தவிதமான செலவும் இன்றி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று லாரி உரிமையாளர்களுக்கு உறுதியளித்து இருக்கிறேன்.

சேவை வரி மற்றும் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டி.டி.எஸ்.) குறித்து ஏற்கனவே நிதியமைச் சகத்துக்கு எங்கள் பரிந்துரையை அனுப்பி உள்ளோம். லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இது குறித்து நிதி மந்திரியை சந்திக்க உள்ளனர். இந்த விஷயத்தில் கண்டிப்பாக ஒரு தீர்வுக்கு நிதி மந்திரி ஏற்பாடு செய்வார் என்று உறுதியுடன் நம்புகிறேன்.லாரி உரிமையாளர்களிடம் ஆண்டுக்கு ஒரு முறையாக வரி வசூலிக்க வேண்டும் என்றும் சுங்க சாவடிகள் தேவையில்லை என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சுங்க சாவடிகளை அகற்றுவது என்பது எந்த வகையிலும் நிச்சயமாக சாத்தியமில்லாதது என்று எடுத்துச் சொன்னேன். வருங்காலத்தில் ஏதேனும் சாத்தியக்கூறு அமையுமானால் நாங்கள் திறந்த மனத்துடன் இந்த பிரச்சினையை அணுகி தீர்வு காண முயற்சிப்போம். ஆனால் இப்போது சுங்க சாவடிகளை அகற்றுவது என்பது முடியாத காரியம். இதுகுறித்த தீர்வு எங்களிடம் இல்லை.

ஒன்றரை மணி நேரம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அனைத்து வகையிலும் பிரச்சினைகளை எடுத்துரைத்தோம். ஆனால் அவர்களின் 3–வது கோரிக்கையான சுங்க சாவடி களை அகற்றுவது என்பது மிகவும் சாத்திய குறைவு. 373 சுங்கச்சாவடிகளில் 150–க்கு மேல் தனியார்களிடமும் மற்றவை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சுங்க சாவடிகள் ஏற்கனவே முன்பணமாக அரசுக்கு செலுத்தி உள்ளனர். அவர்களை திடீரென்று நிறுத்துவது, அவர்களுக்கான இழப்பீட்டை வழங்கு வது போன்ற நிதி தொடர்பான சிக்கல்களும் நிறைய இருக்கின்றன. எனவே திடீரென்று சுங்க சாவடிகளை அகற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இதனை நாங்கள் அவர்களி டத்தில் விரிவாக எடுத்துரைத்தோம்.வருங்காலத்தில் இது தொடர்பான தீர்வுகள் இருந்தால், அவற்றை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் நாங்கள் அவற்றை பரிசீலிப்போம் என்றும் கூறப்பட்டது.

எனவே, பொதுநலனை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. அரசை பொறுத்தவரை நாங்கள் மிகவும் ஆக்கபூர்வமான முறையில் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறோம். அனைத்து வகையிலும் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை இயன்றவரை நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லாத சில கோரிக்கைகளை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் லாரி உரிமை யாளர்களின் 2 அமைப்புக் களில் ஒரு அமைப்பு எங்கள் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். மற்றொரு அமைப்பு வேலை நிறுத்தம் தொடங்குவதாக அறிவித்தனர்”என்று கட்கரி கூறினார்.

அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பின் சுங்க சாவடிகள் கமிட்டி தலைவர் சண்முகப்பா, “எங்கள் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கியமான அங்கத்தினர்களுடன் மத்திய மந்திரி நிதின் கட்கரி மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். சுமார் 1 ½ மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.சுங்க சாவடி அகற்றும் எங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் பிரச்சினைகளுக்கு இந்த பேச்சுவார்த்தை யால் தீர்வு கிடைக்கவில்லை. எனவே ஏற்கனவே அறிவித்தபடி நாடு தழுவிய அளவில் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும்”என்றார்.

அகில இந்திய போக்குவரத்து நலச்சங்கத்தின் தேசிய தலைவர் பிரதீப்சிங்கால், ‘வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’ என்று அறிவித்தார்.அவர் கூறுகையில், ‘இந்தியா வில் 2 முக்கியமான போக்குவரத்து சங்கங்கள் உள்ளன. இதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பு, வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாங்கள் இதில் பங்கேற்க வில்லை. சுங்கச்சாவடிகளை அகற்றுதல் மற்றும் சேவை வரி குறித்த கோரிக்கைகளை ஆதரிக்கிறோம். ஆனால் வேலை நிறுத்தம் ஒன்று மட்டுமே அதற்கான தீர்வு என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்றார்.

தமிழ்நாட்டிலும்…

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் தமிழகத்திலும் திட்டமிட்டபடி இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நேற்று நாமக்கலில் நிருபர்களிடம் கூறுகை யில், ‘நாளை (இன்று) காலை 6 மணிமுதல் வேலைநிறுத்தம் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 2 லட்சத்து 93 ஆயிரம் லாரிகளும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் 89 ஆயிரத்து லாரிகளும், 7 ஆயிரத்து 400 டிரெய்லர் லாரிகளும் இயங்காது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.10 ½ கோடி இழப்பு ஏற்படும். 80 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஆகும்’ என்றார்.