September 17, 2021

ஆப்பிள் 6 எஸ் மற்றும் ஆப்பிள் 6 எஸ் பிளஸ் ! – எப்பூடி?1

ஆப்பிளின் 3 இன் 1 லான்ச் இன்று கிரகாம் பெல் ஆடிட்டோரியத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதிகம் எதிர்பார்க்கப் பட்டுள்ள ஆப்பிள் 7 வழக்கம் போல ஆப்பிள் 6 எஸ் மற்றும் ஆப்பிள் 6 எஸ் பிளஸ் லான்ச் பற்றி அறிவித்தது. ஆப்பிள் ஃபோன் / டேப்ளட் டச் மூலம் புரட்சி செய்த ஆப்பிளே ஸ்டைலஸ் என்னும் ஆப்பிள் பென்சிலை 100 டாலருக்கு அறிமுகபடுத்துகிறது. அதன் பிறகு ஆப்பிள் டிவியை தூசு தட்டி பெரிய அளவில் ரீ லான்ச் செய்யபோகிறார்கள். ஆப்பிள் 6 எஸ் பற்றி டாப் 10 பாய்ன்டர்களை கொடுத்துள்ளேன். மிச்சம் ஃபோன் செப்டம்பர் 25 ஆம் தேதி கையில் வந்த பிறகு….
ravi sep 10
1. A9 பிராசாசர் அதிக வேகம் மற்றூம் ஆப்பிள் 9 ஓ எஸ்ஸுகு சரியான ஜோடி என அறிவிப்பு.

2. ஏரோபிளேனில் உபயோகபடுத்தும் சிறப்பு அலுமினிய பாடி.

3. அதிக சக்தி வாய்ந்த கண்ணாடி ஸ்க்ரீன்.

4. புது கலர் ரோஸ் கோல்டு – நம்ம ஜிகிர்தன்டா கலர்.

5. எல்லா ஆப்பிள் ஃபோனும் அன்லாக்குடன் வருகிறது.

6. ஆப்பிள் பேக்கேஜ் மாசம் 32 செலுத்தினால் – கிளவுட் ஸ்டோரேஜ் / மற்றும் வருடத்துக்கு ஒரு புது ஐஃபோனை மாற்றி கொள்ள முடியும்.

7. 3D Touch சென்சார் உண்மையா கலக்குது.

8. முன்னாடி கேமரா அதான் செல்ஃபி எடுக்கும் கேமரா 5 மெகாபிக்ஸல் மற்றூம் ஃபிளாஷ் இருப்பதால் செல்ஃபி எடுத்த பிறகு ஃபோட்டோஷாப் செஞ்சி ரோஸ் கலர் அடிக்க தேவையில்லை.

9. செப்டம்பர் 12 புக்கிங் ஆரம்பம் செப்டம்பர் 25 ஆம் தேதி 12 நாடுகளில் கிடைக்கபெறலாம்.

10. அதிக சக்தி வாய்ந்த வைஃபை மற்றூம் அதிக எல் டி ஈ பேன்ட்கள் அறிமுகம்.

Much awaited Apple 7 launched as Apple 6s and 6s Plus – Apple claimed a lot in Graham Bell Auditorium – California – But September 25 is the delivery date and we must wait and see how far these claims are REALISTIC………...