September 20, 2021

ஆப்பிள் படைப்புகளை தூரத்திலிருந்து ஹேக்கிங் செய்பவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு!

இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் துறைகளில் குறிப்பிடத்தக்கது ஹேக் கிங் துறை. கணினி ஆர்வம் கொண்ட இளைஞர்கள் பலரும் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டு துறை இது. அப்படி என்னதான் இருக்கு இந்த ஹேக்கிங்கில் என்று கேட்டால் அத்தனையும் ஒரு வித போதை தான் நவீன கால இளைஞர்களின் கணினி பசிக்கு தீனி போடும் இடம் இதுதான் என்றால் மிகை யல்ல. பெரும்பாலும் ஹேக்கர் கள் என்பவர்கள் எப்போதும் கணினியில் தீய வேலைகளையே செய்வார்கள் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் உண்டு. அப்படி நாம் நினைப்பது போல் எல்லா ஹேக்கர்களும் தீயவர்கள் இல்லை. ஹேக்கர்களில் இரண்டு வகை உண்டு.
apple hacers
1. வைட் ஹாட் ஹேக்கர் (Ethical Hacker)

2. ப்ளாக் ஹாட் ஹேக்கர்

இதில் வைட் ஹாட் ஹேக்கர்கள் ரொம்ப நல்லவர்கள். இவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் விளைவதில்லை. இவர்கள் பெரிய கம்பெனிகள் முதல் சிறிய கம்பெனிகள் வரை அந்த நிறுவ னங்களின் கணினி தாக்குதலை சமாளிக்க பணியில் அமர்த்தப் பட்டிருப்பார்கள். அதாவது நீங்கள் ஒரு தனியாக கணினி நிறுவனம் நடத்தி வந்தால், உங்களுகென்று சில போட்டியாளர் அல்லது தொழில் எதிரிகள் உருவாவது சகஜம். அப்படி ஒரு வேளை அவர்கள் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி பிடிக்காமல்,உங்கள் நிறுவனத்தின் சர்வர்களையோ அல்லது இணைய தளத்தையோ குறி வைத்து இணைய தாக்குதல் நடத்தகூடும். அது போன்ற சமயங்களில் சமாளித்து தப்பிப்பதற்க் கும், எதிரிகள் உங்கள் நிறுவன கணினிகளுகுள் ஊடுருவாமல் தடுப்பதற்கும் இந்த வைட் ஹாட் ஹேக்கர்கள் பயன்படுகிறார்கள்.

பிளாக் ஹாட் ஹேக்கர்

இவர்கள் அப்படியே நேர்பதம், மற்றவர்களின் ஈமெயில் கடவுசொல்லை திருடுவது முதல், பெரிய இணையதளங்களை முடக்குவது வரை எல்லாம் இவர்கள் கை வண்ணம் தான். எப்படியாவது நம்மை அவர்கள் வலையில் விழவைத்து வீழ்த்தி விடுவார்கள்.இவர்களிடம் அப்படி ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் கூகிள், அமேசான், இபே, மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கோடி கோடியாக பணத்தை செலவழித்து வைட் ஹாட் ஹேக்கர்களையே பணியில் அமர்த்தி கொள் கிறார்கள். உலகளவில் பிரபலமான பல தளங்கள் இந்த ஹேக்கிங் பிரச்சனை யில் மாட்டி, ஒரே நாளில் காணாமல் போய் இருக்கின்றன

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய படைப்புகளை தூரத்திலிருந்து ஹேக்கிங் செய்ப வருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசளிப்பதாக ஒரு நிறுவனம் சமீபத்தில் அறிவித் துள்ளது.தமது சொந்த தகவல்களைப் பற்றி எளிதில் இது கசியவிடாது என நம்புவதா லேயே பல்வேறு தொழில்முனைவோரும், வசதி படைத்தோரும் ஆப்பிள் தயாரிப்புகளை பெரிதும் நம்பி உபயோகிக்கின்றனர். ஒவ் வொரு முறை தனது தயாரிப்புகளை ஆப்பிள் அப்கிரேட் செய்து வெளி யிடும்போதும் அது இன்னும் பாதுகாப்பானதாக மாறுகின்றது. ஆகவே, இந்த தயாரிப்புகளை ஹேக் கிங் செய்ய முடிகிறதா? என்பதன் சோதனையாக இப்படி ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளார், ‘சீரோடியம்’ நிறுவனர் சாவ்க்கி பேக்ரார். இவர் வூபென் என்கிற பிரபல ஹேக்கிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

வூபென் நிறுவனம் மூலம் அறிந்துகொள்ளும் ஹேக்கிங் பற்றிய புதிய செய்தி களையும், அதன் புதிய முறைகளையும் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்குக் தெரிவித்து, அதில் வருமானம் பார்க் கிறார் சாவ்க்கி. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஐபோன், ஐபேட் போன்றவை யையும் ஹேக் செய்யும் முறை யைத் தெரிந்துகொண்டால், அதன் அடுத்த தயாரிப்பு பாதுகாப் பானதாக மாற்றி யமைக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேக்கிங் செய்வதற்கு வெளிப்படையாக தரப்படும் அதிகபட்ச பரிசுத் தொகை இதுவே! எனவே, இதற்கான போட்டி நிச்சயம் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!