September 25, 2021

ஆபாசத்தின் உச்சம் தொடும் விஜய் டி.வி…!

நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்குப் பொது அறிவோ, சமூக அக்கறையோ தேவையில்லை என்பதற்கு விஜய் டி.வியே உதாரணம்.நகைச்சுவை என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசுவதையும், செய்வதையும் அந்த சேனல் தொடர்ந்து செய்து வருகிறது.
connxions in vijay tv
கனெக்ஷன்ஸ் என்றொரு நிகழ்ச்சி… நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரியல் ஜோடிகளிடம், ‘உன் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நீ பால் கொண்டு போனியா… பியர் கொண்டு போனியா…’ எனக் கேட்கிறார் தொகுப்பாளர் ஜெகன்.

‘அதெல்லாம் கொண்டு போகலை…. நானே போயிட்டேன்’ என்கிறார் ஒரு பெண்.

‘நீங்க எல்லாரும் உங்க ஃபர்ஸ்ட் நைட்டுக்கு எப்படி பால் சொம்போட போனீங்கனு இப்ப நடிச்சுக் காட்டுங்க…’ என அடுத்த வக்கிரத்தை வீசுகிறார் ஜெகன். வெட்கமில்லாத பெண் போட்டியாளர்கள் அப்படியே நடித்துக் காட்ட, வெட்கம் கெட்ட கணவர்கள் அதை ரசிக்கிறார்கள். இடையிடையே ஜெகனின் விரசம் கலந்த பன்ச் வசனங்கள் வேறு….

விஜய் டி.வியை இனி விரச டி.வி என்றே அழைப்போம்.

Vaidehi Ranganathan feeling irritated

2 thoughts on “ஆபாசத்தின் உச்சம் தொடும் விஜய் டி.வி…!

  1. Adults only channel aaga maari vitathu vijay ennum virasa tv. Ithukku F tv ye thevalai polarukku.

  2. VIJAY TV neraiya nalla programs present panranga…orusila unnecessary programs avoid panradhu nalladhu…….*
    -Healthy media-

Comments are closed.