October 16, 2021

ஆன் லைன் மோசடியில் நைஜீரியா தம்பதியிடம் 31/2 லட்சத்தை இழந்த பெங்களூரு ஜட்ஜ்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இன் றளவும் இருக்கவே செய்கின் றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத் தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதே சமயம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் நோக்கில் போலீஸ் எச்சரிக்கை விடுவதும், மீடியாக்கள் அவ்வப்போது நடந்த மோசடி களை வெளிச்சமிட்டு காட்டினாலும் மோசடி தொடர்கதைதான்!
car nov 29
இது குறித்து ஆராய்ந்த போது கல்வி, வியாபாரம், சிகிச்சை, பணி உட்பட பல்வேறு நோக்கங்களுக் காக, இந்தி யாவுக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகளில், ஆப்ரிக்கா கண்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். குறிப்பாக, நைஜீரியா, காங்கோ நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பெங்களூரு மற்றும் சென்னை வருகின்றனர்.இவர்களில் பெரும் பாலானோர், விசா காலம் முடிந்த பின்னரும், தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லாமல், போதைப்பொருள் விற்பனை, ‘ஆன்லைன்’ மோசடி, விபசாரம், பண மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்து உள்ளது. கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்டவர்கள், விசா காலம் முடிந்த பின்னரும், சட்ட விரோதமாக தங்கி இருப்பது போலீஸூக்கே தெரிய வந்திருந்தது.

இதை நம்மிடம் தெரிவித்து பேசிய ஒரு போலீஸ் அதிகாரி, “பாஸ்போர்ட் இல்லாதவரை, கைது செய்து பின்னர் நாடு கடத்துவது எளிதான விஷயமில்லை, உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால், அவர்களை மீண்டும் இந்தியா வுக்கு அனுப்பும் வாய்ப்புள்ளது . கஷ்டப்பட்டு அனுப்பப்படும் அவர் கள் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்து விடாமல், ‘கறுப்பு’ பட்டியலில் சேர்க்கும்படி, பரிந்துரை செய்யப் வேண்டும். அத்துடன் இது போன்று ஒரு வெளி நாட்டு பிரஜையை நாடு கடத்த, ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்படும். இச்செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்வதில்லை” என்றார்

இந்நிலையில் அண்மையில் பெங்களூருவில் வசித்து வரும் ஜட்ஜ் ஒருவர் குறைந்த விலைக்கு விலையுயர்ந்த கார் கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான ஒரு விளம்பரத்தை இணைய தளத்தில் பார்த்தார். இதையடுத்து, அவர் ‘ஆன்–லைன்‘ மூலமாக விளம்பரம் செய்திருந்தவர்களை தொடர்பு கொண்டார். அப்போது நைஜீரியா நாட்டை சேர்ந்த தம்பதி இணையதளத்தில் விளம்பரம் கொடுத்திருப்பது தெரியவந்தது.அவர்கள், ‘ரூ.3½ லட்சம் ரொக்கத்தை ‘ஆன்–லைன்‘ மூலமாக எங்கள் வங்கி கணக்கில் செலுத்தினால் நீங்கள் விரும்பிய கார் உங்களுக்கு கிடைக்கும்‘ என நீதிபதி யிடம் கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய நீதிபதி ‘ஆன்–லைன்‘ மூலமாக அவர் களின் வங்கி கணக்கில் ரூ.3½ லட்சம் ரொக்கப்பணத்தை போட்டுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு கார் கிடைக்கவில்லை.

இது குறித்து நீதிபதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நீதிபதியிடம் மோசடி செய்ததாக நைஜீரியா நாட்டை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள், நைஜீரியாவை சேர்ந்த போலாஜி லாவல், அவருடைய மனைவி அவரில், இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட சிக்க ஒகேபாலா, ஒகிஜி கூலிங், ஓஜா மற்றும் கிறிஸ்டியன் ஒபினா என்பது தெரியவந்தது. கைதானவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.