September 27, 2021

ஆதார் அட்டை விவகாரம்: அரசியல் சாசன அமர்வு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

ஆதார் அட்டைக்காக ஒருவர் தானே முன் வந்து தனது சொந்த, அந்தரங்க, தனியுரிமை விவரங் களை, தகவல்களை அளிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது அதே சமயம்,ரேஷன் பொருட்கள், சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மட்டும் ஆதார் அட்டையை வைத்துக் கொள்ளலாம்; மற்ற அனைத்து திட்டங்களுக்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்ற முந்தைய இடைக்கால உத்தரவு நீடிக்கிறது என்றும் இது குறித்த ஆகஸ்ட் 11-ம் தேதி பிறப்பித்த உத்தரவை தாங்கள் திரும்பப் பெற மாட்டோம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது.
aadhar oct 7
ஆதார் முக்கியத்துவம் குறித்த விவகாரத்தில் நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.செலமேஸ் வர், மற்றும் எஸ்.ஏ. போப்தே ஆகியோருக்கும் அட்டார்னி ஜெனரல் முகுல் ரஹோட்கிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து விசாரணை இன்று (புதன்கிழமை) தள்ளி வைக்கப்பட்டது.

இன்றைய விவ்வததில் ஆதார் அட்டை பெறுவதற்காக தனது சொந்த, தனியுரிமை அல்லது அந்தரங்கத் தகவல்களை விட்டுக் கொடுக்க நாட்டின் ஏழை மக்களும் வறியோர்களும் தயாராக உள்ளனர், இது அவர்களுக்கு உணவையும் வருவாயையும் வழங்கும் எனவே ஆதார் அட்டைத் திட்டத்தின் வழியில் நிற்க வேண்டாம் என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தின் அடிப்படையை சுப்ரீம் கோர்ட் நீதிபதி சலமேஸ்வர் கேள்விக்கு உட்படுத்தும் போது, “ஏழை மற்றும் வறியோர் என்பதற்காக அவர் தனியுரிமைக் கொள்கையை வைத்துக் கொள்ளக் கூடாதா” என்றார்.

அட்டார்னி ஜெனரல் முகுல் ரஹோட்கி ”ஆதார் அட்டையை அனைவரும் விருப்பப்பட்டே எடுத்துக் கொள்கின்றனர். குடிமக்கள் நன்கு அறிந்தே இதற்கான தெரிவை மேற்கொள்கின்றனர்” என்றார்.

இதற்கு அமர்வின் மற்றொரு நீதிபதி எஸ்.ஏ.போப்தே பதிலளிக்கும் போது, “நன்கு அறிந்தே நான் இந்தத் தெரிவை மேற் கொண்டேன் என்பது பற்றி நான் நன்கு அறியவில்லை. அதாவது நான் அளிக்கும் தகவல்களைக் கொண்டு என்ன செய்யப்படும் என்பதைப் பற்றிய முழு விவரம் என்னிடம் இல்லை. நீங்கள் அதனை எனது சொந்த விவகாரங்களில் தலையீடு செய்வதற்கா கவோ, கண்காணிப்பதற்காகவோ பயன்படுத்த முடியும்” என்றார்.

இதற்கு ரஹோட்கி பதிலளிக்கையில், “100 கோடி மக்களுக்காக நீங்கள் பேச முடியுமா? ஆதார் பயன்படுத்துவது ஒருவருக்கு பிரச்சினையாக இருந்தால் பயன்படுத்தாமல் இருந்து விட்டுப் போகட்டும். தினக்கூலியில் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளவர்கள், உண்ண உணவு இல்லாதவர்களுக்கு ஆதார் ஒரு பிழையற்ற வழிமுறை. ஆனால் இங்கு நீங்களோ சிலரது தனியுரிமை, அந்தரங்க உரிமைகள் பற்றிய அச்சங்களை பேசுகிறீர்கள். நீங்கள் நாட்டுக்காகப் பேசவில்லை” என்றார்.

அட்டார்னி ஜெனரல் ரொஹாட்கிக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறும் போது, “நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சென்று சேர வேண்டிய பயன்கள் சென்றடை வதை சுப்ரீம் கோர்ட் ஏன் தடுக்க வேண்டும்? ஒரு ஏழை, ‘எனது தனியுரிமையை எடுத்துக் கொள்ளுங்கள் பணம் கொடுங்கள்’ என்று கேட்கும் போது, சுப்ரீம் கோர்ட்டோ பணம் வேண்டாம் தனியுரிமையை வைத்துக் கொள் என்று கூறுகிறது” என்றார்.

இதனிடையே, ஆதாரை எதிர்த்து பல்வேறு தரப்பினர் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் செய்த மனுவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறும் போது, “பயோமெட்ரிக்ஸ், என்னுடைய கருவிழி, என்னுடைய விரல் ரேகைப்பதிவுகள் என்னுடைய அந்தரங்கமான சொந்த சொத்து. பயோமெட்ரிக்தான் நான். முன்னாள் எஃப்.பி.ஐ., சி.ஐ.ஏ. க்கள் இதில் உள்ளபோது, கார்ப்பரேட் கள் கோடிக்கணக்கான மக்களிடமிருந்து தனித்துவ சொந்தத் தரவு அறுவடைச் செய்கின்றனர். இந்தத் தரவை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது பற்றி அரசுக்கு எவ்வித அறிதலும் இல்லை. சட்ட ரீதியான அனுமதியோ, நிர்வாக அதிகாரமோ எதுவும் இல்லாமல் இத்தகைய முக்கிய தரவுகள் திரட்டப்படுகின்றன” என்றார். இதனையடுத்தே நடந்த விசாரணையின் போது ஆதார் அட்டை வழக்கில் தனியுரிமை, அந்தரங்க தகவல்களை ஒருவர் தானாகவே முன் வந்து அளிக்கும் விவகாரத்தை விசாரிக்க அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது