ஆதார் அட்டை கட்டாயமில்லை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி புட்டசுவாமி தாக்கல் செய்த பொது நலன் மனுவில், விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, ஆதார் அட்டையை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்குகிறது.திருமணத்தைப் பதிவு செய்ய மகாராஷ்டிராவில் ஆதார் அட்டை அவசியம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, சுதந்திரம், சம உரிமை போன்றவற்றுக்கு எதிராக ஆதார் அட்டையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்ற நீதிபதிகள், பி.எஸ். சௌஹான் மற்றும் எஸ்.ஏ. பாப்டே கொண்ட அமர்வு “அரசு வழங்கும் சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என்று பொதுமக்களை மத்திய, மாநில அரசுகள் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று கூறியுள்ளனர்.இதையடுத்து ஆதார் அட்டை மூலம் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள காஸ் மானிய திட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
sep 23 - aadhar waste
எலக்ட்ரானிக் அடையாள அட்டையான் இந்த ஆதார் கார்டு வழங்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 12 இலக்கங்களைக் கொண்டிருக்கும் அதில் அட்டை வைத்திருப்பவரின் அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். அவரின் பெயர், முகவரி, வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு எண், சமையல் காஸ் இணைப்பு எண், பாஸ்போர்ட் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் என அனைத்து விவரங்களும் இருக்கும்.
மேலும் மத்திய அரசின் மானியத் திட்டங்களான, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், பொது வினியோகத் திட்டம், சமூக பாதுகாப்பு திட்டம், பென்ஷன், மானிய விலை சமையல் காஸ் இணைப்பு, வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான நிதியுதவி, உயர்கல்வி ஊக்கத் தொகை போன்ற திட்டங்களுக்கான நிதி இந்த ஆதார் அட்டை வாயிலாக பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த அடையாள அட்டையை மானிய திட்டத்திற்கு கட்டாய அடையாள அட்டையாக பயன்படுத்தி நாடு முழுவதும் விரிவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் சமீபத்தில் காஸ் மானிய திட்டம் ஆதார் அட்டை மூலம் வங்கி கணக்கு துவக்குபவர்களுக்கு உங்கள் பணம் உங்கள் கையில் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையை மீறியது என்பதால் ஆதார் அட்டை திட்டத்தை ரத்து செய்ய கோரி முன்னாள் நீதிபதி ஒருவர் பொதுநல மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.அதில் சில மாநிலங்கள் திருமண பதிவு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் எனக் கூறுவதாக தெரிவித்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆதார் அட்டை வழங்கும் தனிநபர் அடையாளம் ஆணையம் குறித்து அரசியல் சாசன வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டினர்.

திருமண பதிவு, சம்பள விநியோகம் உள்ளிட்ட அரசின் சேவைகளுக்கு ஆதார் அட்டையை சில மாநிலங்கள் கட்டாயமாக்கியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை ஆதாரங்கள் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்தமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாட்டின் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க கூடாது என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர். சமையல் எரிவாயு இணைப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதுவரை அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க இயலாது நிலையில் மத்திய அரசு உள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கியுள்ள சில மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது

>Aadhar cards not compulsory, don’t give them to illegal immigrants: SC
**************************************************************************************
n a significant development, the Supreme Court on Monday ruled that Aadhar cards are not mandatory even as various state governments insist on making it compulsory for a range of formalities, including marriage registration, disbursal of salaries and provident fund among other public services.