October 16, 2021

ஆண்ட்ராய்டில் ஆல் இந்தியா ரேடியோ!

ஆண்ட்ராய்டு யூஸர்களுக்காக ஆல் இந்தியா ரேடியோ ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ‘ஆல் இந்தியா ரேடியோ லைவ்’ என்ற இந்த ஆப்ஸை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். விரைவில் இந்த ஆப் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் மொபைல்களிலும் வருகிறது.
air may 6
இந்தியாவின் பாரம்பரிய ஒலிபரப்பாளரான ஆல் இந்தியா ரேடியோ இன்றைய நவீன தலைமுறைக்கு ஏற்ப டிஜிட்டலில் களமிறங்கியிருக்கிறது. ஆண்ட்ராய்டில் வெளியாகியுள்ள இந்த புதிய ஆப் வழியாக ஆல் இந்தியா ரேடியோவின் பாப்புலரான சேனல்களை துல்லியமாக கேட்கலாம். ஏ.ஐ.ஆர் வெப்சைட்டிலும் ஸ்டிரீமிங்காக ஆல் இந்தியா ரேடியோவை கேட்க முடியும்.