September 20, 2021

ஆண்டுக்கு 1.5 கோடி சம்பளத்தில் நம்மூரில் ஆள் பிடித்த ஃபேஸ்புக்!

டாப் சமூகவலைத் தளமான ஃபேஸ்புக்.நாடு முழுவதும் உள்ள 16 ஐஐடிகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் வேலை வாய்¢ப்பு முகாம்கள் நடத்தும்.அந்த வகையில் இந்தாண்டுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. தற்போது புவனேஸ்வர், சென்னை, டெல்லி, காந்திநகர், குவஹாதி, ஐதராபாத், இந்தூர், ஜோத்பூர், கான்பூர், கரக்பூர், மாண்டி, மும்பை, பாட்னா, ரோபர், ரூர்க்கி, வாரணாசி ஆகிய 16 ஐஐடிகளில் நேற்று முன்தினம் தொடங்கிய வேலைவாய்ப்பு முகாமில் கரக்பூர் ஐஐடியை சேர்ந்த மூன்று மாணவர்கள் மற்றும் மும்பையைச் சேர்ந்த சில மாணவர்களை தங்களுடைய நிறுவனத்துக்கு தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.50 கோடி ஆண்டு சம்பளம் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது ஃபேஸ்புக்.
FB job
ஐஐடி வரலாற்றில் இதுவே மிகவும் அதிகபட்ச சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் மிகவும் உயர்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடியில் படிக்கும் மாணவர்களைத் தேடி இந்தாண்டு பல்வேறு வெளிநாட்டு முன்னணி நிறுவனங்கள் குவிந்துள்ளன. கடந்த 3, 4 ஆண்டுகளைவிட இந்தாண்டு 10 முதல் 20 சதவீதம் கூடுதல் சம்பளம், 15 முதல் 20 சதவீதம் கூடுதலான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு, 30 சதவீதம் வரை வெளி நாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.