October 16, 2021

ஆண்கள் கைப்பந்து போட்டியை பார்க்க முயற்சி செய்த இளம்பெண்ணுக்கு ஜெயில்!

ஈரானில் ஆண்கள் கைப்பந்து போட்டியை பார்க்க சென்ற பிரிட்டிஷ் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.பின்னர் ஈரான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு இந்த பெண்ணுக்கு ஒருவருட சிறைதண்டை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.ஈரான் நாட்டு போலீசாரால் கைது செய்யபட்ட பெண் லண்டன் பல்கலைகழக பட்டதாரி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈரான் மற்றும் இத்தாலி நாட்டில் ஆண்கள் விளையாடும் கைப்பந்து போட்டியை பார்க்க பெண்களுக்கு தடைவிதிகபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
woman nov 2
இது குறித்து ஈரானிய போலீசார்,”நாட்டின் பாதுகாப்பு கருதியே அந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.அந்த பெண் தன்னை விடுவிக்கும் படி சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி உள்ளார்.சிறைக்காவலர்கள் அவளை கொடூரமான எவின் சிறைக்கு மாற்றி உள்ளனர்.

அவளை விடுதலை செய்ய வேண்டும் என்று இணையதளத்தில் 5 லட்சம் ஆதரவாளர்கள் பெண்ணுக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர்.இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் ஈரான் நாட்டில் கால்பந்து போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்வது தடைவிதிக்கபட்டுள்ளது.ஆண்களின் முறையற்ற நடத்தை தவிர்ப்பதற்க்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

.