ஆணுறை வழங்கும் இயந்திரங்களில் 90 சத மிஷின்களை காணோமாம்!

மத்திய அரசு மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. இது வரை ஸ்பெக்ட்ரம் முதல் நிலக்கரி வரை பல்வேறு துறைகளில் ஊழல் மற்றும் இழப்பீடு நடந்து வருவதாக மத்திய தணிக்கை குழு தெரிவித்து வந்துள்ளது. இந்த பிரச்னை பார்லிமெண்டில் புயலை ஏற்படுத்தும். இதற்கு பதில் அளிக்க முடியாமல் பிரதமர் முதல் அனைத்து அமைச்சர்களும் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய தணிக்கை குழு பார்லி.,யில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் அலட்சியப்போக்கை(யும்) சாடியுள்ளது. இந்த அறிக்கையில்,”மத்திய அரசு தரப்பில் பொது இடங்களில் எச். ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் பல ஆயிரம் ஆணுறை வழங்கும் மிஷின்கள் நிறுவப்பட்டது. இதில் எதுவும் சரியாக பயன்படவில்லை.குறிப்பாக 90 சத மிஷின்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேல் மாயமாகி விட்டன.
sep 7 - condom mechines
மத்திய சுகாதார அமைச்சகம் இந்த பணியில் அக்கறை இல்லாமல் எதுவும் நிலைப்படுத்த முடியாத அளவிற்கு செயல்பட்டுள்ளது. மொத்தம் 11 ஆயிரத்து 25 மிஷின்கள் அமைக்கப்பட்டதில் 9 ஆயிரத்து 860 மிஷின்கள் காணாமல் போயிருக்கின்றன. ஆயிரத்து 130 மிஷின்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவும் செயல்படவில்லை.

இந்த திட்டத்திற்கென ரூ . 21 .54 கோடி ஒதுக்கீடு செய்து எவ்வித பலனும் கிட்டவில்லை. எதிர்பார்த்த விநியோகம் நடக்கவில்லை” என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை சி.ஏ.ஜி தனது அறிக்கையில் கூறியுள்ளது அடுத்த சலசலைப்பை கிளப்பியுள்ளது.

Over 10, 000 condom vending machines go missing

**********************************************************
Almost 90 per cent condom vending machines installed at public places by National Aids Control Organisation (NACO) for HIV/AIDS prevention have gone missing, a CAG report has said.In its report tabled in Parliament, the CAG has rapped NACO for failing to achieve the objective of improving the accessibility of condoms in high-risk areas due to poor planning and implementation.