October 20, 2021

“ஆட்டு மந்தைகளாய் போன ஆன்லைன் சமூகம்”!.

இன்று ஞாயிறு என்பதால் வழக்கம் போல தத்துபித்து. எ ம ச – என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் என்று அடிக்கடி ஃபேஸ்புக்கில் கூற கேட்க்கும் உண்மை அர்த்தம் நாம் எல்லோரும் வாழும் சமுதாயம் அல்ல – ஆன்லைன் சமூகம் தான். இந்த ஆன்லைன் சமூகம் சமீபத்திய காலமாய் ஆட்டுமந்தைகளாகி வருகிறது என்றால் அது மிகையல்ல….!
ravi nov 16
எந்த ஒரு விஷயத்துக்கும் முதல்ல ஒருத்தரின் வாயை அடைக்கனும்னா எதிராளி செய்யும் முதல் தந்திரம் “ஏன்யா நீ படிச்சவன் தானே” என்ற சூழ்ச்சி கேள்விதான்..இதிலே பலர் வாயைடைத்து போகும் காரணம் இன்னும் சன்டையை வளர்த்தால் இவன் முன் நாம் படிக்காத முட்டாள் ஆகிவிடாதா என பம்மி பஸ்மாகும் பல ஆக்கபூர்வமான சன்டையும் விவாதமும். எந்த அறிவாளி சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்னு சொன்னதை நம்பும் சமூகமோ அதே சமூகம் தான் இந்த புரளியை கிளப்பிவிட்ட பிரம்மாவாக இருக்க வேண்டும்.

படிப்புக்கும் பண்புக்கும் என்னயா சம்பந்தம்? எவன் ஐயா இதற்க்கு ஒரு அளவு கோளை கொண்டு வந்தது…..தமிழகத்தின் கலைமகளாய் கருதப்பட்டும் கர்ம வீரர் காமராஜர் முதல் பல கன்னியமிக்க தலைவர்கள் என்ன மெத்த படித்தவர்களா? இந்த நாட்டை ஆளவில்லையா அல்லது நாட்டுக்கு ஏதும் செய்ய முனையவில்லையா? அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த ஆன்லைன் சமூகத்தில் நடக்கிறது. ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சிகாக ஒரு பெண்ணை வீடு புகுந்து திருடும் திருடியாக ஒரு நாள் வெ(ற்)றி மோகம் கொண்ட தினசரி வெளியிட அதனை என்ன ஏதென்று விசாரிக்காமல் ஆன்லைன் சண்முகங்கள் அதை காட்டு தீயாய் பற்ற வைக்க கடைசியில் உண்மை என்னவென்று உங்களுக்கும் எனக்கும் தெரியும்.

ரேடியேஷன் தெரியுனுமா ஹாஷ் 77 அமுக்கவும்னு ஒரு போஸ்ட் – ரேடியேஷன் என்பது நீங்கள் நினைப்பது போல் ஒரு மாதிரி விஷயம் அல்ல – நீங்கள் இருக்கு ஏரியாவின் டவர் / அதன் அட்டுனேஷன் / பேட்டரியின் அளவு என்று எத்தனையோ விஷயங்கள் அடக்கியது தான் இந்த ரேடியேஷன். ஒரு ரூபாய்க்கு இதய நோயக்கு தீர்வு என் ஆடுத்த ஒரு மெசேஜ் பரவ – இப்படி பல விஷயங்களை என்ன ஏது என்று கேட்காமாலே பரப்பு நாம் உண்மையாக படித்தவர்களா? இப்போது இந்த சமூகம் இன்னும் சற்றே கீழ் இறங்கி கொடூர மரணங்களையும், பிணவறை காட்சிகளையும் கூட பகிரும் அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்ட இந்த சமூகத்துக்கும், முன் போகும் ஆட்டின் பிட்டத்தை மட்டுமே பார்த்து செல்லும் ஆட்டு மந்தைக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

காணவில்லை என போஸ்ட் போடும் எத்தனை பேர் அந்த நம்பருக்கு ஃபோன் செய்து விசாரித்து இருப்பீர்கள் – பலர் ஏன் சில பிரபல பதிவர்கள் உட்பட தன் பிள்ளைகளின் படம் ஃபேம ஆக வேண்டும் என்று சில தரம் தாழந்த செயல்களை செய்ய கொஞ்சமும் வெட்கபடுவதில்லை.

ரத்ததானம், 16 மடங்கு மருந்து விலை உயர்வு, வாட்ஸப்பை புறக்கனிப்போம் என்று வாட்ஸப்பிலே campaign முதல் மூட நம்பிக்கை மருத்துவ முறைகளும், மதம் சார்ந்த பொய் தகவல்களையும், இனம் சார்ந்த தவறான சித்தரிப்புகளையும், ஜாதி சார்ந்த ஜமுக்காள நாட்டாமைகளும், அருவ்ருக்க தக்க அரசியல் வசனங்களையும் பரப்பும் நாம் எந்த விதத்திலும் காலரின் பட்டனை கூட தூக்கிவிட தகுதியானவர்கள் அல்ல. படிக்காதவர்களின் பண்புக்கு முன் படித்த எந்த ஒரு ஈகோவும் சளைத்தவன் அல்ல.

ஐ ஐ டியை நேற்று முதல் குமைப்பவர்களுக்கு கடைசியாய் ஒன்றை கூறுவேன் ஐ ஐ டியில் 1991லே இடமும் கிடைத்து படிக்க முடியாமல் போன நான் ஒரு உண்மையை கூறுகிறேன் – ஐ ஐடி நீங்கள் நினைப்பது போல படித்த பண்பானவர்கள் நிறைந்த சமூகம அல்லவே – படிப்பு என்னும் மனப்பாட மெஷனிகளில் சிறந்த மெஷின்களே ஐ ஐ டி. அங்கு நேற்று அல்ல 1980களில் இருந்து நடக்கும் மார்டி கிராஸ் என்னும் கல்ச்சரில் நடக்காத ஒழுக்க கேடுகளே இல்லை இதை கம்பேர் செய்தால் முத்த ஒழுக்கினத்திற்க்கும் படித்த பம்பிலிமாஸ்களுக்கும் அறவே சம்பந்தம் இல்லை…………

அதனால் படித்த படிக்காத அத்தனை பேரும் ஆட்டு மந்தைகள் கூட்டத்தில் இருந்து விலகி அருமையான சமுதாயம் ஆக்குவோம் என்று உறுதி கொள்வோம் – அனைவருக்கும் இனிய ஞாயிறு வாழ்த்துக்கள்