October 19, 2021

ஆட்டுப்பால் குடித்தால் டெங்கு காய்ச்சல் வராது!

அண்ணல் காந்தி குடித்ததெல்லாம்… ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலுங்க… இது பிரபல தமிழ் சினிமா பாடல் வரி. இந்த வரியை மெய்ப்பிக்கும் வகையில் டெல்லி மக்கள் இப்போது ஆட்டுப்பாலை விரும்பி குடிக்கின்றனர்.ஆட்டுப்பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.இப்படி மருத்துவ குணம் அதிகம் கொண்ட ஆட்டுபாலை குடித்தால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம் என்கின்றனர் டெல்லிவாசிகள்.
12 -GOAT ON BED
டெல்லியில் கடந்த ஜூலை மாதம் பருவமழை தொடங்கியது. இதனால் அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது. கனமழை பெய்ததால் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. குளம் போல் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியானதால், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கிழக்கு டெல்லி பகுதியில் கடந்த மாதம் 30ம் தேதி வரை 435 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இப்போது இந்த எண்ணிக்கை 617ஆக உயர்ந்துள்ளது. டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவ குணம் கொண்ட ஆட்டுப்பால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் டெல்லியில் ஆட்டுப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு லிட்டர் வெள்ளாட்டு பால் 400க்கு விற்பனை செய்யப்பட்டது.பின்னர், விலை இருமடங்காகி 800க்கு விற்பனையானது. இப்போது ஒரு லிட்டர் ஆட்டுப்பால் 2500க்கு விற்பனையாகிறது. அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆட்டுப்பாலுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. இதனால் இறைச்சி கூடங்களுக்கு ஆடுகள் கொண்டு செல்லப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திரிலோக்புரியில் உள்ள சிறுபான்மையினர் மேம்பாட்டு மையத்தின் தன்னார்வலர் சாந்தினி கூறுகையில், ‘ஆட்டுப்பாலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது. இதனால் இந்த பாலை அருந்தும் போது டெங்கு காய்ச்சலை பரவாமல் தடுக்க முடியும். பப்பாளி இலையும் டெங்கு காய்ச்சல் குணமாக்கும்‘ என்றார்.

அது சரி. டெங்கு காய்ச்சலில் அறிகுறிகள் என்ன ?

டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின் வழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.

Goat milk used to treat dengue in Delhi
*********************************************************
In the Muslim neighbourhood of Trilokpuri’s Block-32, goats are everywhere – tethered to gates, lying on charpoys and defecating on stairs. Their droopy ears and quizzical expressions hang over their decorated collars readying them for slaughter around Id-Ul-Azha or Bakrid next week.