October 16, 2021

அவார்டுகள்! By சாருஹாசன்

சில நாட்களுக்குமுன்.. யூகி சேது, காமிரா மேன் ரவி கே சந்திரன், பிரதாப்போத்தன் மூவரும் விஜய் டிவி கோபிநாத்துடன் நடுவர்கள் வேலையையும் தர ஆய்வுகள் பற்றியும் பேசக்கேட்டேன். படங்களின் வெற்றி தோல்விகள் பற்றி சிந்திக்கும்போது மக்கள் தீர்ப்பு பற்றியும் ஆய வேண்டும் என்று நினைத்தேன்.ஒரே ஒரு இயக்குனர் தன் மன திருப்திக்கு மட்டில் படம் எடுக்கும் முயற்சி பெரிய தவறு என்பது என் கருத்து. நானும் இரண்டு படங்கள் இயக்கினேன். இரண்டுமே முதல் காப்பி பார்த்ததும் என் மனமே நொந்து போனது. 32 ஆண்டுகளாக வெளியே சொல்லாமல் மறைத்து வைத்ததை இன்று ஒப்புக் கொண்டு நிம்மதி அடைகிறேன்.
uthiri-ppokkal
சில பிரபல இயக்குனர்கள் “நான் ஒரு தரமான படம் முயற்சித்தேன். மக்கள் தலைக்குமேல் போய்விட்டது!” என்று ஏதோ தாங்கள் செப்பாக் கிரிக்கட் மைதானத்தில் பம்பர் போட்டது போலவும் அது மக்கள் தலைக்குமேல் பந்து போய்விட்டது போலவும் பேசுவார்கள்………. அவர்கள் கொடுத்த உதாரணத்தில் அடங்கிய சிந்தனையில் பெரிய தவறு ஒன்றும் இல்லை.. ஆனால் பந்து தலைக்குமேல் செல்ல வில்லை………. ஒரு தற்காப்பு முடிவாக மக்கள் தலையை குனிந்துகொண்டு உடலை வளைத்து டக் செய்துவிட்டு வேறு பந்துக்கு தங்களை தயார் செய்து கொள்கிறார்கள்.

இது திருப்பதி முதல் கன்யாகுமரிவரை ஒரே மாதிரி நடக்கிறதே?……. நான் நடித்த முதல் படத்தின் கதாநாயகன் விஜயனை ஒரிரண்டு படங்களுக்குப்பின் திருமலை முதல் கன்யாகுமரி வரை ஒரு சீராக “பாம்பாட்டி…………!” என்று சொல்லி ஒதுக்கி விட்டார்கள்

உதிரிப்பூக்கள் விஜயன் அவர்களை நான் கமல் ஒரு இளைஞனாக….. ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் ஹீரோவாக நடித்த நாட்களில் மலயாளப் படங்களில் படப்பிடிப்பில் ஓற் அறையில் உடகார்ந்து மலயாள வசனம் எழுதிக் கொண்டிருந்த போது சந்தித்திருக்கிறேன்.அவர் வேறு எந்தப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார் என்று ஞாபகம் இல்லை. ஆனால் பாரதிராஜா படத்தில் “பட்டாளத்தான்” என்ற பாத்திரத்தில் புகழ் பெற்றார்.

அதற்கு பிறகுதான் இயக்குனர் மஹேந்திரன் அவர்கள் இவரை உதிரிப்பூக்களுக்கு தேர்ந்தெடுத்தார். உதிரிப்பூக்கள் என்ற படத்தின் கதை அமைப்பும் காட்சிகளும்……. அந்தப்படத்தின் வெற்றியும் எல்லாவற்றையும்விட அந்தப்படம் மட்டில் இன்னும் பேசப்படுவதும் இன்றைக்குக்கூட எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.

இராமாயாணம் மஹாபாரதம் போன்ற கதைகள் இன்னும் மக்களை கவருவது போல்தான் இந்த “உதிரிப்பூக்கள்” கதையும்……ஏகலைவன் கட்டைவிரலை தட்சிணையாக வாங்கிய துரோணாச்சாரியார் பெயரை இன்றைக்கும் ஒரு நல்ல ஆசிரியரை புகழ்வதற்கு பயன் படுத்துவதும், இராமயணத்தில் கடைசிவரை சம்மதமில்லாமல் சீதையை தொடாதவனைப் பற்றி காமாந்தகாரன் என்று சொல்ல வைப்பது போலும்தான் மஹேந்திரன் செய்திருக்கிறார். எப்படி மக்களை தன் வழியில் சிந்திக்க செய்தார் என்பது இன்று வரையிலும் எனக்கு புரியவில்லை

இன்று கூட ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்த பெண்களை கல்லுரிக்குள் அனுமதிப்பதில்லை. ஒரு பள்ளி தலைவர்…….. பூப்போட்ட சட்டையோடு சினிமா ஹீரோ போல வந்த ஆசிரியரை “ஒரு ஜிப்பா அணிந்து வரக்கூடாதா?” என்று கேட்டதே கொடுமை என்று நம்ப வைத்திருக்கிறார். பனியனோடு வகுப்பு நடத்தும் ஆசிரியரை கண்டித்ததை ‘நீங்கள்தானே பூப்பூவாக உள்ள சட்டை போடக்கூடாது என்றீர்கள்?” என்று ஹீரோ வாத்தியார் மரியாதையின்றி சொல்வது சரியாம் ……….
அதற்காக இப்படியா? என்று சொல்வதுதான் கொடுமையாம்.

தன் திருமணத்தன்று போய்…… ஒரு தந்தையிடம் நீ உன் பிள்ளைகளை சரியாக வளர்க்க மாட்டாய்..! என்னிடம் கொடுத்துவிடு என்று கேட்பது நியாயமாம்.. அவன் அவள் சேலையை உரிந்து அனுப்பியதற்கு அவனுக்கு மரண தண்டனையாம்…. ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆங்கிலத்தில் அந்த பெண்மணி செய்ததை GRAVE AND SUDDEN PROVICATION என்று சொல்லி கொலை செய்தால்கூட NOT AMOUNTING TO MURDER என்று சொல்வார்கள்.

நம் நாட்டு அரசியல்வாதிக்ளெல்லாம் தலைக்கு இரண்டு மனைவிகள் இன்றும் வைத்திருக்கிறார்கள் மனைவின் தங்கையை பெண் கேட்டதே கொடுமையான குற்றமாம்..” முடிவில் நம்மை நம்ப வைக்கிறார் ஊரோடு ஒன்றுகூடினால் கொலையே செய்யலாமாம்.

எந்த கணவன்……………….. மனைவி அவனுக்கு தெரியாமல் முன்னாள் காதலனிடம் கடன் வாங்கி தன் தந்தைக்கு உதவி செய்தால் சபாஷ் போட்டு கைதட்டுவான்.? அவன் நடந்ததை பஞ்சாயத்தில் கூறவிடாமல் அடித்து துரத்துவது நல்ல தீர்ப்பாம்.

ஒரு ஒரு பெருமை இந்த படத்திற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை.

ஆனால் இயக்குனர்..மஹேந்திரன்.. ஒரு வால்மீகி… கம்பர்… வியாசருக்கு இணையான மந்திரவாதி…………………. 35 ஆண்டுகளுக்கு பிறகும் உதிரிப்பூக்களை ..வணங்க வைக்கிறாரே?

https://www.facebook.com/s.charu.hasan/posts/10153212706027598