”அவளை அறை” – 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் சமூக பரிசோதனை!- வீடியோ

குழந்தைகளின் மன உலகம் மிகவும் விந்தையானது.ஆனால் பெற்றொர் அதை என்றுமே புரிந்துகொள்ள முயல்வதில்லை.விந்தையான அந்த உலகத்தின் வண்ணங்களில் மூழ்கி எழுந்து பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்து தான் நாமும் பெரியவர்களாகியிருக்கிறோம் என்றாலும் நாம் குழந்தைகளின் உலகத்தை அலட்சியமே செய்கிறோம். ஆனாலும் வெளி உலகின் அத்தனை நிகழ்வுகளையும் கேஷுவலாம கவனித்து அதில் தன்க்கேற்ற மாதிரி பதிவுகளை குழந்தைகளின் மன உலகு சுவடுகளாய் பதித்துக் கொண்டேயிருக்கின்றன. அவற்றிலிருந்து குழந்தைகள் இந்தப் நிஜ,வெளி உலகம் பற்றி, சமூகம் பற்றி ஆண்களைப் பற்றி, பெண்களைப் பற்றி, இயற்கையைப் பற்றி, பிற ஜீவராசிகளைப் பற்றி தன் மனதில் எண்ணங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இந்தக் எண்ணங்களே பின்னர் அவர்கள் பெரியவர்களாகும் போது அவர்களுக்கும் சமூகத்துக்குமான உறவு நிலைகளைத் தீர்மானிக்கிறது.
slap her
இந்நிலையில் இந்த வருட தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள Fanpage.it என்ற இணையதளம் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் ‘#slap her'(அவளை அறை) என்ற சமூக பரிசோதனையை நடத்தியது. இதன் மூலம் குழந்தைகள் மனதை புரிந்து கொள்வதும், அவர்கள் மனதில் பெண்களிடம் வன்முறையாக நடந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தையும் விதைப்பதே இந்த பரிசோதனையின் நோக்கம்.

இதே போன்ற பரிசோதனையை Ufaan.org என்ற இணையதளம் இந்தியாவில் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் செய்தது. பெண்ணை அறைய சொன்னதும் அவர்களிடமிருந்து வரும் பதில் பலரை நெகிழவும் யோசிக்கவும் வைத்துள்ளது.வீடியோவை நீங்களே பாருங்களேன்: