October 16, 2021

“அவளுக்காக அவன்” இயக்கத்தில் இணைந்து விட்டீர்களா?

ஐ.நா. பெண்கள்’ அமைப்பு இந்தியாவில் பாலின சமத்துவ இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமையன்று (அக்.18) புதுதில்லியில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் நோக்கம்: பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதில் ஆண்களை ஈடுபடுத்துவது.“அவளுக்காக அவன்” (HeForShe) என்ற இந்த இயக்கம் கடந்த செப்டம்பர் 20 அன்று ஐ.நா. பொது சபையில் தொடங்கிவைக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி வருகிறது. பெண்ணுரிமை, பாலின சமத்துவம் ஆகிய லட்சியங்களின் தூதர்களாக ஆண்கள் பங்களிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
he for she
பெண்ணைப் பின்னுக்குத் தள்ளும் பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் சமமான கூட்டுறவுகளுக்காக வாதாடவும் பெரியவர்களும் பையன்களுமாய் ஆண்கள் பங்களிக்கிறபோது பாலின சமத்துவ லட்சியத்தை நோக்கி முன்னேற முடியும் என்று ஐ.நா. பெண்கள் அமைப்பு கூறுகிறது.

இதில் நம்பிக்கையும் உறுதியும் உள்ள 1,82,806 ஆண்கள் இது வரையில் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். 1,82,807வது, 1,82,808வது, 1,82,809வது, …வது, …வது ஆணாக நீங்களும் இணைய வேண்டாமா? கீழே உள்ளத் தளத்தில் தொடர்பு கொண்டு உடனே இணைந்திடுங்கள்:

http://www.heforshe.org/#take-action

பாலின சமத்துவம் நிலைபெறுகிறபோதுதான் மானுட விடுதலை முழுமையடையும்.\\

 

Kumaresan Asak