October 16, 2021

அவர் காரி துப்பவில்லை …..! இளையராஜா அறிவிருக்கா? என கேட்கவில்லை …!??

கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் எங்கள் குடும்ப நண்பர். என் சினிமா வாழ்வுக் கான ஆரம்ப புள்ளி இப்ரஹிம் ராவுத்தர் மூலமாக சுதாங்கன் மூலமாக விஜயகாந்த் அலுவலகம்தான்… விஜயகாந்தை 30 வருடங்களாக தெரியும். அவரது பலம் பலவீனம் நற்குணம் நாகரீகம் நியாய வாதம் அறிவு மற்றும் சில விஷயங்களில் அறிவின்மை என எல்லாம் ஓரளவு தெரியும் அவரது வாழ்க்கை தி மு… தி பி என இரண்டு பகுதிகளாக பிரிக்கக் கூடியது. அதே போல சினிமா வாழ்க்கை சினிமா வாழ்க்கைக்குப் பின் எனவும் இரண்டு விதமாக உருவெடுத்தது. அதே போல உடல் நலக் குறைவு அதற்கான சிகிச்சை இவை எல்லாம் அவரது அன்றாட பேச்சு முக பாவனை சட்டென உணர்ச்சிவசப் படும் தன்மை பேச்சு ஸ்டைல் இதில் எல்லாம் பல மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டது.
edit dec 28a
ஆனால் சிந்தனை .. அவருக்கே உரிய எளிமை .. எதையும் நேரடியாக பேசும் தைரியம் .. நினைத் ததை செய்யும் தீர்மானம் .. இரண்டு கழகங்களுக்கென எதிரான நிலைப்பாடு .. மக்களுக்காக யோசிக் கும் பரந்த மனப்பான்மை இதில் எல்லாம் எந்த மாற்றமும் இல்லை அதே விஜயகாந்த் தான் அதே கேப்டன் தான்…நேற்றைய தினம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர்களை நோக்கி காரி துப்பியது பரபரப்பாகி விட்டது. ஊடகமெங்கும் இதே பேச்சு.

அவரைப் புறக்கணிக்க வேண்டும் .. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் .. அவர் திருந்த வேண்டும் … போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என சரம் சரமாய் அம்புகள் அவரை நோக்கி…

சரி அவர் காரி துப்பவில்லை ….. இளையராஜா அறிவிருக்கா என கேட்கவில்லை … என வைத்துக் கொள்வோம் … சில கேள்விகள் மட்டும் முறையாக பொதுவாக கேட்போம் .. யாராவது பொறுப்பாக விளக்கமாக பதில் சொல்வார்களா?

1… பத்திரிகையாளராக கேமாரவுடன் மைக்குடன் கேள்வி கேட்க என்ன தகுதி வேண்டும் .. என்ன படித்திருக்க வேண்டும் என்ன அனுபவமிருக்க வேண்டும்

2…. ஒரு முக்கிய பத்திரிகையாளர் சந்திப்பு எனில் அங்கே சூழ்நிலைக்கு பொருந்தாத கேள்வி கேட்கப் பட்டால் … பேட்டி அளிப்பவர் யாரெல்லாம் அந்த சந்திப்புக்கு வரலாம் என தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டா இல்லையா … இல்லை எனில் திட்டமிட்டு தர்மசங்கடப்படுத்தவே தேடி வரும் பத்திரிகையாளரை எப்படி நேர் கொள்வது?

3…. விஜயகாந்த் அளித்த பேட்டியில் பத்திரிகையாளர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார் ” நீங்கள் எல்லாம் உங்கள் முதலாளி சொல்வதைத்தான் கேட்பீர்கள் நியாயத்தை கேட்க மாட்டீர்கள் அல்லவா? ‘ இந்த கேள்விக்கு அந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த அனைவரது பதில் என்ன? ( அவரது கேப்டன் டி வி நிருபருக்கும் இதே கேள்வி பொருந்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை)

4…. பத்திரிகைகளின் வருமானம் அரசாங்க விளம்பரங்கள்தான் என இருக்கும் போது எதிர் கட்சித் தலைவரிடம் ஒரு அணுகுமுறை ஆளும் கட்சி தலைவரிடம் ஒரு அணுகு முறை என்பதுதானே நடக்கிறது அதை காரி துப்பாமல் கோபமின்றி கேட்டால் அதற்கு என்ன பதில்?

5 …. தந்தி எப்போதும் ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிட்டதே இல்லை தினகரன் தி மு க என்பது தெரிந்ததே .. தினமணி திராவிடர் கழகங்களுக்கு எதிரானது என்பது உண்மைதானே .. அதே போல அனைத்து ஊடக முதலாளிகளும் ஏதோ ஒரு கட்சி தலைவர்தானே?

6 நடு நிலை … நீதி .. நியாயம் .. தர்மம் .. இதெல்லாம் இல்லாத ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியில் பேட்டி அளிப்பவர் மட்டும் …………….. கண்ணியம் ….கட்டுப்பாடு …. மரியாதை .. மற்றும் அடக்கமாக பேட்டி அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

இனி வரும் காலங்களில் கேள்விகள் பதிவு செய்யப் பட்டு அனுப்பப் பட்டால் பதில்களும் பதிவு செய்து அனுப்பப் படும் என்கிற நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்ல்லை.. நேரடியாக பத்திரிகையாளர்களை சந்திப்பது என முடிவெடுத்தால் கேள்வி கேட்பவர்களின் நேமைக்கு யார் பொறுப்பு?

வெங்கட் சுபா