அரசியல்வாதிகளுக்கு பண நோட்டு மாலை போடாதீங்கோ!: ரிசர்வ் வங்கி கோரிக்கை!!
இந்திய ரூபாய் நோட்டுக்கள் தரம் உள்ளதாக தயாரிக்கப்பட்டாலும் விரைவில் சேதம் அடைந்து விடுகின்றன. ரூபாய் நோட்டுக்களை பல மடிப்புகளாக மடிப்பதால் அவை விரைவில் கிழிந்து விடுவதும் உண்டு.ரூபாய் நோட்டுக்கள் அழுக்காவதில் இருந்து தடுக்கவும், அவைகளுக்கு நீண்ட ஆயுள் கொடுப்பதற்கும் ரிசர்வ் வங்கி மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் தயாரித்து புழக்கத்தில் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தவிர ரூபாய் நோட்டுக்களை நீண்ட காலம் பயன்படுத்த பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்”ரூபாய் நோட்டுக்கு பொதுமக்கள் மரியாதை கொடுக்க வேண்டும். ரூபாய் நோட்டுக்கள் என்பது நமது நாட்டின் கவுரவத்தின் அடையாளமாகும். எனவே ரூபாயை தவறாக பயன்படுத்தக்கூடாது.தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் தலைவர்களுக்கு ரூபாய் நோட்டு மாலை போடுகிறார்கள். ரூபாய் நோட்டுக்களை சுருட்டி கயிற்றில் கட்டுவதால் அவற்றின் ஆயுள் குறைந்து விடுகிறது.
எனவே அரசியல் பிரமுகர்களுக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவிப்பதை தவிர்க்க வேண்டும்.கோவில் விழாக்களிலும் சாமி சிலைகளுக்கு சிலர் ரூபாய் நோட்டு மாலை போடுகிறார்கள். இதுவும் தவறு. சிலர் ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள்.இதையெல்லாம் நாட்டு நலன் கருதி பொதுமக்கள் நிறுத்த வேண்டும். அப்படியானால்தான் ரூபாய் நோட்டுக்களை அதிக நாட்கள் நாம் பயன்படுத்த முடியும்.”என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Don’t use currency for garlands: RBI
************************************************************
“The Reserve Bank of India has appealed to members of public not to use banknotes for making garlands, decorating pandals and places of worship or for showering on personalities in social events, etc,” an RBI release said today.