October 25, 2021

அரசின் இலவச லேப்-டாப் இணைய தளத்தில் தள்ளுபடி விற்பனை!

கடந்த திமுக ஆட்சியில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. ஏற்கெனவே ஒரு தொலைக்காட்சி இருக்க, சின்னதாய் அரசு வழங்கியதை சிலர் வீட்டின் வேறு இடங்களில் கூட வைத்து பயன்படுத்தினர். பலர் அப்போதே அதை விற்பனையும் செய்தனர்.இதனிடையே தமிழக அரசு வழங்கும் விலையில்லா பொருட்களைப் பெற்ற பயனாளிகள் அதனை ஆன்-லைன் சந்தை மூலம் விற்பனை செய்ய விளம்பரங்களை வெளியிட்டு வருவதை ஊடகங்கள் சுட்டிக்காட்டியது. தற்போது பிரபலமாகி வரும் ஆன்-லைன் சந்தையில் (ஓஎல்எஸ், க்விக்கர் போன்றவை மூலம்) வீட்டில் உள்ள பழைய பொருட்களை விற்பது போன்று அரசு வழங்கிய விலை யில்லா பொருட்களை விற்பனை செய்ய விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.
ad labtop
இதில் அரசு வழங்கிய மடிக்கணினி ரூ.9000 முதல் ரூ.10,000 வரையிலும், அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்றவை ரூ.3,500 வரையிலும், அரசு வழங் கிய சைக்கிள் ரூ.1000 என்ற விலையிலும் விற்பனைக்கு தயாராக உள்ளதாக விளம்பரங்கள் இந்த இணையதளங்களில் பளிச்சிடுவதைக் கண்டு யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனிடையே உத்தரப்பிரதேச மாநில அரசு, மாணவர்களுக்கு இலவசமாக அளித்த லேப்-டாப்கள் இணையத்தில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் இலவச லேப் – டாப்பை இணையதளம் மூலம் ரூ.14,000 க்கு விற்றபோது இது தெரியவந்தது. இது தொடர்பாக, மொரதாபாத் மாவட்ட பள்ளி ஆய்வாளர் சர்வன் குமார் யாதவ் “இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் இலவச மடிக்கணினிகளை விற்பதை மாநில அரசு தடுப்பது சுலபமல்ல. வேண்டுமானால், மாணவர்களிடம் இலவசமாக வழங்கப்பட்ட லேப்-டாப்பை அவர்களின் வருங்காலத்தை ஒளிமயமாக அமைத்துக்கொள்ள பயன்படுத்தும்படி அறிவுரை வழங்கலாம்” என்றார்.