October 19, 2021

அமெரிக்க பாதுகாப்புத்துறை ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு அழைப்பு!

அமெரிக்காவில் நிதியின்றி அரசு நிர்வாகம் 5ம் நாளாக முடங்கிக் கிடக்கிறது. அமெரிக்க அரசு. பணிக்கு வரவேண்டாம் என சுமார் 8 லட்சம் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். வேலைக்கு வராத நாள்கள் ஊதியமில்லா விடுப்பாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று 4 லட்சம் ஊழியர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ளது. மேலும் மீதம் உள்ள ஊழியர்களுக்கு விடுமுறைகாலத்துக்கான ஊதியம் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 - u s open
அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் அரசாங்கக் கடன்தொகையின் உச்ச வரம்பு குறித்து இரு கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட விவாதத்தின் காரணமாக ஒபாமா அரசு பொதுப்பணித்துறை ஊழியர்களைத் தற்காலிகமாக ஊதியமில்லாத பணி விடுப்பில் அனுப்பியது. இந்த நடவடிக்கை மேலும் தொடரக்கூடும் என்ற அச்சமும் பொதுமக்களிடையே எழுந்தது.

இந்த நிலையில், நேற்று பாதுகாப்புச் செயலரான சக் ஹெகல் பணிவிடுப்பில் செல்லுமாறு அறிவிக்கப்பட்ட பாதுகாப்புத்துறையின் ஊழியர்கள் வரும் வாரம் மீண்டும் பணிக்குத் திரும்பலாம் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறையின் இணை செயலரான ராபர்ட்.எப்.ஹேல் பணிநீக்கம் செய்யப்பட்ட 3,50,000 ஊழியர்களில் 90 சதவிகிதம் பேர் திரும்ப அழைக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க் கிழமை அன்று தொடங்கிய இந்த பணிநீக்க செயல்பாட்டினால் 8,00,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நல்வாழ்வு, திறன், மன உறுதி, பங்களிப்பு மற்றும் உடனடி சேவைப் பிரிவில் இருப்பவர்கள் மீண்டும் அழைக்கப்படலாம் என்று பெண்டகன் ராணுவத் தலைமையகமும், நீதித்துறை உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

US shutdown: Defence staff told to return to work
**************************************************************
Most of the 400,000 US defence department staff sent home amid the US government shutdown have been told to return to work next week.
Defence Secretary Chuck Hagel said the decision was based on an interpretation of the Pay Our Military Act.A budget row between Republicans and Democrats has forced the closure of federal services for five days now.