October 18, 2021

அமெரிக்க அரசின் இரண்டு வார முடக்கம் முடிவுக்கு வந்தது!

அமெரிக்காவில் புதிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் செலவுக்கு நிதியின்றி அரசு நிர்வாகம் இரண்டு வார காலமாக முடங்கிக் கிடந்தது. நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காணுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைய இருந்தது.இந்நிலையில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சிக்கும், எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நேற்றிரவு உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவலை இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் வெள்ளை மாளிகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
17 --obama
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து பெரும்பாலான அரசு அலுவலகங்கள் அக்டோபர் 01ம் தேதி முதல் மூடப்பட்டன. இதனால் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நெருக்கடி நிலையை சமாளிக்க கடன் உச்சவரம்பை உயர்த்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்த பின்னரும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் சுமார் 11 மணிநேரத்திற்கு பின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் ஒபாமா, சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் கொண்ட வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து குடியரசு கட்சிகள் தங்களின் பிடிவாத போக்கை தளர்த்திக் கொண்டதால் பிரதிநிதிகள் சபை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தபடி கடனுக்கான உச்சவரம்பு 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்களாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. மேலும், ஜனவரி 2015 வரையிலான நிதி ஒதுக்கீடுக்கும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். இதுதொடர்பாக ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள செனட் சபையில் இந்த மசோசா நிறைவேறியது.பின்னர் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையிலும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மசோதாவிற்கு இரு சபைகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதற்கு அதிபர் ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் அமெரிக்காவை சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் விலகி ஒளி பிறந்துள்ளதாகவும், இதனால் அமெரிக்க தொழில்களுக்கும், மக்களுக்கும் வாழ்வு கிடைத்துள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார். தொடர்ந்து நெருக்கடி நிலையயை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் அரசு அலுவலகங்களை உடனடியாக திறப்பதற்கான மசோதாவிலும் அவர் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Effects of US shutdown reaches Earth’s end
********************************************************