December 4, 2021

பாஸ்போர்ட்டுகளை அதிக அளவில் வழங்கி வருவதில் 3-வது இடத்தில் இந்தியா!

முன்பெல்லாம் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் எத்தனை நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்பதே தெரியாது. வெரிபிகேஷனுக்கான போலீஸ்காரர் எப்போது வருவார் என்பதும் தெரியாது. பாஸ்போர்ட் அலு வலகம் சென்றாலோ, வேண்டாதவர்கள் வந்ததுபோல ஊழியர்கள் நடத்து வார்கள். பாஸ்போர்ட் எடுக்க தேவையான எல்லா ஆவணங்கள் இருந்தும், வரிசையாக அடுக்கவில்லை என்று, அதற்கு ஒரு நாள் அலைய விடுவார்கள். சரியாக அடுக்கிவிட்டோம் என்கிற நம்பிக்கையோடு கால்கடுக்க காத்திருந்து உள்ளே சென்றால் நேரம் முடிந்துவிட்டது நாளைக்கு வா என திருப்பி அனுப்பி விடுவார்கள்.
Indian-Passport
வெளியிலோ இதற்கென்றே காத்திருக்கும் பல புரோக்கர்கள் கையில் காசு திணித்தால் வேலை நடக்கும் என 1000 ரூபாய் பாஸ்போர்ட் எடுக்க 5000 ரூபாய் வரை செலவு வைப்பார்கள். அதுவும் சென்னை, திருச்சி இரண்டு இடத் தில்தான் எடுக்க முடியும். இதர ஊர்க்காரர்கள் பெட்டி கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். பிறகுதான் தமிழகத்தில் மேலும் இரண்டு இடங்களில் அலுவலகம் திறந்தார்கள்.இப்படி பெரும் சுமையாக விளங்கிய பாஸ் போர்ட் எடுக்கும் வைபவத்தை அலுவல்கள் அனைத்தையும் கணினிமயமாக்கியதன் மூலம் எளிமையான நிகழ்வாக மாற்றியது

இதனிடையேதான் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே பாஸ்போர்ட்டுகளை அதிக அளவில் வழங்கி வருவதில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியும், தலைமை பாஸ்போர்ட்டு அதிகாரியுமான முக்தேஷ் கே.பர்தேசி தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன் 60 லட்சமாக இருந்த பாஸ்போர்ட்டு வினியோகம் சென்ற ஆண்டுடன் முடிவடைந்த காலத் தில் 1.2 கோடியாக உயர்ந்துள்ளது.2010-ம் ஆண்டில் பாஸ்போர்ட்டு சேவா திட்டங்கள் வாயிலாக புதிய பாஸ்போர்ட் மையங்களை நிறுவி பாஸ்போர்ட் டுகளை விரைவாக வழங்க வகை செய்யப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 37 பாஸ்போர்ட்டு அலுவலகங்களுடன் 90 சேவா கேந்திரங்கள் உள்ளன. உலகிலேயே பாஸ்போர்ட் டுகளை அதிக அளவில் வழங்கும் 3-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது எந்த ஒரு மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ பாஸ்போர்ட்டு தொடர்பான வசதிகள் இல்லாமல் இல்லை. பாஸ்போர்ட் வழங்கு வதில் கால தாமதம் ஏற்படும் இடம் பாஸ்போர்ட் பெறுபவரை பற்றிய போலீஸ் விசாரணை. கடந்த 2013-ம் ஆண்டில் போலீஸ் தனது விசாரணை முடித்து ஆவணங்களை சமர்பிக்க 49 நாட்கள் ஆனது. ஆனால் தற்போது இந்த கால அளவானது 36 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் கணினி மூலமான ஆவணப் பறிமாற்றம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணைக்கான கால அளவு 8 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது

அனைத்து இடங்களிலும் அதற்கான வசதிகள் உள்ளன. வெளிநாடுகளுக்கு படிக்க செல்வது, வேலைக்கு செல்வது, சுற்றுலா செல்வது உள்ளிட்டவை அதிகரித்து வருவதால் பாஸ்போர்ட்டுகளின் தேவையும் வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.