September 29, 2021

அமெரிக்கா கல்லூரி ஒன்றில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடக்கும் சம்பவம் வாடிக்கையாக உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டு செய்யும் இடங்களில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அமெரிக்காவின் ஒரேகோன் மாகாணத்தில் உள்ள சமூதாய கல்லூரியில் மர்மநபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளார். கல்லூரிக்குள் திடீரென புகுந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு உள்ளான். ஒவ்வொரு அறையாக சென்று தாக்குதல் நடத்திஉள்ளான். இதற்கிடையே துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படது. தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
usa colleage fire
தகவல் அறிந்துவந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். போலீஸ் படை வருவதற்கு முன்னதாக மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10க்கும் அதிகமான பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலையானது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தகவல் அடுத்த 24 மணிநேரங்களுக்கு தெரிவிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

இதற்கிடையே துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிர்தப்பிய மாணவி காஸென்ரா வெல்டிங் பேசுகையில், “சம்பவம் நடைபெற்றபோது நான் 35 முறைக்கு மேலாக துப்பாக்கியால் சுட்ட சத்தத்தை கேட்டேன்” என்று கூறிஉள்ளார். துப்பாக்கி சூட்டை அடுத்து நாங்கள் எங்களுடைய வகுப்பறையை அடைத்துக் கொண்டோம்… அனைத்து விளக்குகளையும் நிறுத்தி விட்டோம், நாங்கள் மிகவும் பயத்தில் இருந்தோம், எங்களுடைய பெற்றோர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் உங்களை அதிகமாக நேசிக்கின்றேன் என்று கூறினோம்… என்ன நடக்கும் என்று தெரியாமல் இதனை கூறினோம், இதுவே எங்களுடைய கடைசி வார்த்தையாக இருக்கலாம் என்றும் நினைத்தோம், எப்படியோ உயிர் தப்பிவிட்டோம், என்று மாணவி குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்தியவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அமெரிக்க மீடியாக்கள், துப்பாக்கி சூடு நடத்தியவன் கிறிஸ் ஹார்ப்பர் மெர்சர் என்று செய்திகள் வெளியிட்டு உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று வந்தாலும், நியூயார்க்கில் ஐ.நா. பொது கூட்டம் நடைபெற்று வருவதால் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாமா? என்ற சந்தேகமும் வலுத்து உள்ளது.

கல்லூரியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்டனம் தெரிவித்து உள்ளார். துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பாக கடுமையான சட்டங்கள் கொண்டு usa colleage fireவரப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.