September 18, 2021

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!

பாகிஸ்தானில், பாகிஸ்தான் தலிபான் தலைவர், ஹக்கிமுல்லா மெஹ்சூத்,30, அமெரிக்காவின் ஆளில்லா விமானம் வீசிய ஏவுகணை தாக்குதலில் கொல்லப் பட்டார்.அமெரிக்காவின் இச்செயலால் பாக்.,மற்றும் அமெரிக்க உறவு பாதிக்கப்படும் என்றும் இத்தகைய செயலை ஏற்க முடியாது எனவும் பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
nov 3 - pakistan Vs u s a
பாகிஸ்தானில் வடக்கு மாகாணத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த தாலிபன் தலைவர் ஹக்கீம் உல்லா மசூத் உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தாலிபன்களுடன் பாகிஸ்தான் அரசு நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் முறிந்-துவிட்டன. இந்நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், அந்நாட்டுடனான உறவுகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இத்தகவலை பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சரான சவுத்ரி நிசார் அலிகான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடக்கு மாகாணத்தில் நிலைமை அபாயகரமாக உள்ளதாகவும், இது பாகிஸதானுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறினார். தாலிபன்கள் மீது அமெரிக்கா அடிக்கடி நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.