October 25, 2021

அமெரிக்காவின் உயர் பதவியில் இந்தியப் பெண்! – செனட் ஒப்புதல்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாட்டிற்கான அமெரிக்காவின் துணை செயலாளராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் என்பவரை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். நிஷா தேசாய் தற்போது அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் ஆசியாவிற்கான துணை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இதனை வெளியுறவுத் துறைகளை கவனிக்கும் குழு ஒப்புதல் அளித்தது.
18 - Biswal.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் கடந்த 1999-2002-ல் அமெரிக்காவின் சர்வதேச உறவுகள் பிரதிநிதிகள் சபையில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2005-10 வரையில் வெள்ளை மாளி்கையின் நிதியமைப்பு குழு மற்றும் வெளிநாட்டு செயல்பாடுகளை கவனித்து வரும் துணைக்குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் ஆசியாவிற்கான துணை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி அதிபர் ஓபாமா மத்திய ஆசியாவிற்கான துணை செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக செனட் சபையின் வெளியுறவு கமிட்டியில் விவாதிக்கப்பட்டது. அப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிஷாவின் திறமையைப் பாராட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான துணை மந்திரியாக நிஷா தேசாய் நியமிக்கப்படுவதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அவர் முறைப்படி பதவியேற்க உள்ளார்.

ராபர்ட் பிளேக் வகித்து வந்த இந்தப் பதவிக்கு, முதல் முறையாக இந்திய வம்சா வழியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை இதுவரை அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

US senate confirms Nisha Desai Biswal as Asst Secy of State
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
The US Senate has confirmed Indian-American woman administrator Nisha Desai Biswal as the Assistant Secretary of State for South and Central Asia, making her the first person from the community to hold the top diplomatic position.