October 16, 2021

அமெரிக்காவின் உயரிய விருதான ‘ஜூனியர் பரிசு’ வென்ற இந்திய வம்சாவளி டீம்!

பொதுமக்களுக்கான அமைப்பு நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் அறிவியல் கண்டுபிடிப்பு தொடர்பான போட்டிகளை நடத்தி வருகிறது.இந்தாண்டுக்கான போட்டியில் 1,700 பேர் பங்கேற்றனர். தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இந்திய வம்சாவளி இளம்பெண் இந்திராணி தாஸ் இந்த போட்டியில் முதல் பரிசை பெற்று, விருதை தட்டி சென்றார். இவர் தலையில் காயம் ஏற்படும் காயம் மற்றும் நோயை குணப்படுத்துவது குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இவருக்கு சுமார் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

usa mar 17

இந்திய வம்சாவளியான மற்றொரு மாணவர் அர்ஜூன் ரமணி மூன்றாவது பரிசை தட்டிச் சென்றார். இவர் கணிதம், கிராப் தீயரி மற்றும் கம்ப்யூட்டர் புரோகிராம் தொடர்பான ஆய்வு கட்டுரை சமர்ப்பித்திருந்தார். இவருக்கு சுமார் 98 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.அர்ச்சனா வெர்மா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் சூரிய ஒளி சக்தி குறித்த ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். இவருக்கு பரிசாக சுமார் ரூ.60 லட்சம் கிடைத்துள்ளது.

இதுபோல் பிரதிக் நாயுடு ஏழாவது இடத்தையும், பிருந்தா மதன் ஒன்பதாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதுதவிர இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேருக்கும் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் விருது அமெரிக்காவின் உயரிய விருதாக கருதப்படுகிறது. ஜூனியர் நோபல் பரிசு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விருது பெற்ற 12 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்காவின் உயரிய அறிவியல் விருது போட்டியில் சாதனை படைத்தவர்களை அமெரிக்க வாழ் இந்தியர் அமைப்பு பாராட்டியுள்ளது.