April 2, 2023

அமிதாப், அவர் மகன் & மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்திக்கு கொரோனா!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. கரோனா தொடர்பாக பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த அமிதாப் பச்சனுக்கு நேற்று (ஜூலை 11) தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார் அமிதாப்.

அவர் தெரிவித்த சில மணித்துளிகளில், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையும் அவருடைய ட்விட்டர் பதிவிலேயே தெரிவித்தார். அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், தொழில்துறை பிரபலங்கள் எனப் பலரும் அமிதாப் பச்சன் – அபிஷேக் பச்சன் இருவரும் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, அமிதாப் பச்சன் – அபிஷேக் பச்சன் இருவருக்கும் கரோனா தொற்று உறுதியானதால் ஒட்டுமொத்தக் குடும்பத்தினருக்கும் முதல் கட்ட கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அனைவருக்குமே நெகட்டிவ் என வந்தது. இன்று (ஜூலை 12) காலை நடைபெற்ற இரண்டாம் கட்ட சோதனையில் ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.