அபார வளர்ச்சிப் பாதையில் இந்திய ஆன்லைன் வர்த்தகம்!
இந்தியாவில் தினந்தோறும் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகரங்களில் உள்ள மக்களில் 45 சதவிதம் பேர் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பெரிய கடைகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 20 சதவிதம் வரை குறைந் துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விலைக் குறைவு, வீட்டிற்கே பொருள் வந்து விடுவது, பொருள்களை ஆன்லைனிலேயே ஒப்பிட்டுப் பார்த்து கொள்வது என வசதிகள் பல உள்ள தால் தற்போது பெரும்பாலோனோர் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஆரம்பித்து விட்டனர். 2020 ஆம் ஆண்டுக்குள் 13 கோடி இந்தியர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அழகு மற்றும் ஆரோக்கிய பொருட்கள் சந்தை 60 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
பெய்ன் அண்ட் கம்பெனி மற்றும் கூகுள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு விற்பனை அழகு மற்றும் ஆரோக்கிய சந்தை சார்ந்த பொருளாக இருக்கும் என்றும், ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டுக் குள் 13 கோடியாக உயரும் என்றும் ஆய்வு கூறியுள்ளது.
மொத்த விற்பனையில் 20 சதவீதம்வரை இணையதளம் வழியாக விற்பனையாகும். 2020 ஆம் ஆண்டில் இணைய தளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 65 கோடியை தொடும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இதில் 20 கோடிக்கும் அதிகமாக பெண் பயனாளிகளாக இருப்பார்கள் என்றும், 25 கோடிக் கும் அதிகமானவர்கள் கிராமப்புற பயனாளிகளாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்படுள்ளது.
அதிக அளவிலான நுகர்வில்,அழகு சாதனங்கள்.ஆரோக்கிய பொருட்கள் துறை இடம் பிடிக்கும். மின் னணு தொழில் நுட்பம் இல்லாத வீட்டு உபயோக பொருட்களைவிட மின்னணு தொழில் நுட்பத்திலான வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை 20 மடங்கு அதிகமாக இருக்கும்.வளர்ந்து வரும் பொருட் கள் துறையில், மின்னணு தொழில்நுட்பத்திலான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது என்று கூகுள் இந்தியா நிறுவனத்தின் தொழில்துறை இயக்குநர் விகாஸ் அக்னிஹோத்ரி குறிப்பிட்டுள்ளார்.ஷாப்பிங் தொடர்பான தேடல்களில் அழகு மற்றும் ஆரோக்கிய பொருட்கள் குறித்து தேடுவது அதிகரித்துள்ளது. கூகுள் தேடல்களில் இதற்கடுத்து ஆடைகள், மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார்.