September 27, 2021

அந்தமான் நடுக்கடலில் சோறு தண்ணீரில்லாமல் கதறி அலறும் மியான்மர் அகதிகள்!

மியான்மர் அகதிகள்படகு ஒன்று ஒருவாரமாக அந்தமான் கடற்பகுதியில் சிக்கிஉள்ளது. படகில் உள்ளவர்கள் கொஞ்சம் கூட உணவோ, குடிப்பதற்கு தண்ணீரோ இன்றி வாடிவருகின்றனர். பசியினால் சுமார் 10 பேர் இதுவரையில் உயிரிழந்த துயரமான சம்பவம் அரங்கேறிஉள்ளது. மனித வாழ்க்கைக்கு முக்கியமானவற்றில் ஒன்றான தண்ணீரும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தண்ணீருக்கு நடுவே உயிருடன், போராடும் அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவியாக தவித்து வருகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவர்கள், சிறுநீரை குடிக்கும் அவலநிலையும் காணப்படுகிறது என்று பி.பி.சி. செய்தி வெளியிட்டு உள்ளது.
myanmor
மீன் பிடிபடகு ஒன்று சுமார் 350 முஸ்லீம் ரோஹிங்க்யா சிறுபான்மையினருடன் தாய்லாந்து நாட்டிற்கு வந்துஉள்ளது. அவர்களுக்கு தாய்லாந்து அனுமதி அளிக்க மறுத்து உள்ளது. மீன்பிடி படகில் இருக்கும் நபர் பி.பி.சிக்கு பேசுகையில், எங்களை மாலுமிகள் கைவிட்டுவிட்டனர். இயந்திரத்திரத்தை செயல்படவிடாமல் சென்றுவிட்டனர். இறந்தவர்களிடன் உடல்களை கடலில் வீசிவிட்டோம். என்று கூறிஉள்ளார். இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகள் அவர்களை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தாய்லாந்து மற்றும் மலேசியா கடற்பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இதுபோன்று சிக்கிஉள்ளனர் என்று நம்பப்படுகிறது.

அகதிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம் ரோஹிங்க்யா சிறுபான்மைத்தவர்கள் ஆவர். பர்மா என்று தெரியப்படும் மியான்மர் நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் இவர்கள். இவர்கள், மியான்மர் நாட்டின் குடிமக்களாக அங்கீகாரம் செய்யப்படவில்லை. அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் நீடித்து வருகிறது. தாய்லாந்து நாட்டின் தெற்கு கடல்பகுதியில் அகதிகள் சென்ற படகுசிக்கியிருப்பதாக பி.பி.சி. செய்தியாளர் ஜோனாதன் தெரிவித்து உள்ளார்.

“படகில் இருக்கும் மக்கள் அனைவரும், எங்களிடம் உணவு மற்றும் தண்ணீரையே கேட்டனர்,” படகில் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். மிகவும் பழமையான மீன்பிடி படகு முற்றிலும் மக்களால் நிரம்பி உள்ளது. சிக்கியிருக்கும் மக்கள் அவர்களுடைய சிறுநீரை பிடித்து குடிக்கும் அவல நிலையை நாங்களும் பார்க்க நேர்ந்தது. நாங்கள் தண்ணீர் பாட்டீல்களை படகிற்கு வீசினோம். எங்களிடம் இருந்தவற்றை கொடுத்தோம். என்று ஜோனாதன் தெரிவித்து உள்ளார். மீன்பிடி படகில் உள்ளவர்கள் தங்களை வெயிலில் இருந்து காத்துக்கொள்ள போர்வைகளை கட்டிஉள்ளனர். 50 பெண்கள் மற்றும் 84 சிறுவர்கள் உள்பட பலர் அகதிகளாக உள்ளனர். அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக கடலிலே உள்ளனர்.