October 19, 2021

அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் : ஜெ. அறிவிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ளதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் இந்த அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்ட அவ்ர் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் நாளை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத் தம்மை சந்திக்க உள்ளதாகவும் அமைதி, வளமை, வளர்ச்சி என்பதே தமது நாடாளுமன்ற தேர்தல் முழக்கம் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
jayalalitha
தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.இப்பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன் முடிவில், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-இ.கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார். மேலும் அமைதி, வளம் மற்றும் முன்னேற்றம் ஆகியவையே அதிமுக கூட்டணியின் தேர்தல் முழக்கமாக இருக்கும் என அவர் கூறினார்.

பரதன் கூறுகையில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் ஜெயலலிதா பிரதமர் ஆவார் என குறிப்பிட்டார். சுதாகர் ரெட்டி கூறுகையில் மதச்சார்பற்ற அரசை மத்தியில் உருவாக்கவே இக்கூட்டணி அமைக்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்படும் என்றார்.நாளை மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரான பிரகாஷ் காரத் ஜெயலலிதாவை சந்தித்து அக்கட்சியுடனான கூட்டணி இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது