September 27, 2021

அதள பாதாளத்துக்கு போன ரியல் எஸ்டேட்! ஆனாலும் அடங்காத வங்கிகளின் அழிச்சாட்டியம்!

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னை புறநகர்ப் பகுதியில் பிளாட் வாங்கினவர் இந்த வருஷம் அவரோட அவசரத் தேவைக்கு விக்கனும்னு நினைச்சா வாங்கின விலையை விட 30 சதவீதம் கம்மியா கேக்கறாங்க. பாவம் 40 லட்ச ரூபாய் லோன் வாங்கி அதுக்கு மாசம் 40 ஆயிரம் வட்டி கட்டி 24 மாசத்துக்கு மொத்தமா 9,60,000 ரூபாய் வட்டியும் கட்டியிருக்காரு. இன்னும் அசல் கட்டவே ஆரம்பிக்கல. ஆக மொத்தம் அவருக்கு இனிஷியல் பேமென்ட் ரூ 10 இலட்சம் மற்றும் 9.6 இலட்சம் 19.6 இலட்ச ரூபாய் நஷ்டம். இது தவிர வங்கி pre closure charges ஒரு அமெளன்ட்டை கறந்துடும்.
Property-Investment-
இன்னிய நிலைமையிலே சென்னையில் கட்டி முடிச்ச புது பிளாட்டுகள் 75 ஆயிரத்துக்கு மேல் தேங்கிப் போய் இருக்கு. வாங்கறதுக்கு ஆள் இல்ல. கோடிகள்ல புரண்ட ரியல் எஸ்டேட் ஜாம்ப வான்கள் இப்போ இலட்சத்துக்கும் ஆயிரத்துக்கும் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கு. பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஏகத்துக்கும் கடனாளியாகி ரெண்டு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு இருக்கார். சில பில்டர்கள் கடன் தொல்லை தாங்காம தற்கொலை யும் பண்ணிகிட்டாங்களாம்.

கொஞ்சம் டீப்பா விசாரிச்சா -சென்னை மற்றும் புறநகர்ப்பகுதியில் ரியல் எஸ்டேட் தலைதூக்க இன்னும் பல வருஷங்கள் ஆகும் போலிருக்கு.. இந்த தொழில்ல 10 வருஷத்துக்கு முன்னாடி முதலீடு செஞ்சு நிறைய சம்பாதிச்சு கொழுத்தவங்க மேலும் இதிலேயே முதலீடு பண்ணி லாக் ஆகிக் கிடக்கிறாங்க..அத்தோட இந்த தொழில் நல்லா போகுதேன்னு நம்பி ஒரு சிலர் கடனை வாங்கி இதுல முதலீடு செஞ்சு இப்போ மாட்டிகிட்டு முழிக்கிறாங்க. லாபம் பாத்த ஒரு சிலர் இப்போ இந்த தொழில் நலிஞ்சு போனதால இனி இது வேலைக்கு ஆகாதுன்னு வேறு துறைக்கு மாறி அங்கயும் கைய சுட்டுகிட்டு அடுத்து என்ன செய்வதுன்னு தெரியாம தவிக்கிறாங்க.

எப்பவும் ஒரே சீரான விலையேற்றம்னா அது நிலைச்சு நிக்கும். ஆனா இந்த ரியல் எஸ்டேட் துறை மட்டும் கடந்த பத்து வருஷத்துல ராக்கெட் வேகத்துல மேலே போய் இப்போ அந்த ராக்கெட் போன வேகத்தை விட வேகமா கீழே விழுந்து போச்சு…ஒரு நாளைக்கு ஒரு ரேட்டுன்னு போன நிலம், வீடு, ப்ளாட் இதெல்லாம் இப்போ கம்மியான விலையில கூவிக் கூவி வித்தாக்கூட வாங்க ஆள் இல்ல. ஒரு இடத்துல கட்டின ப்ளாட்டை விளம்பரம் பண்ணும் போது வித்துப் போச்சு வித்துப் போச்சு இன்னும் ஒண்ணு ரெண்டு தான் இருக்குன்னு சொல் லிட்டு மறுபடியும் ஒரு மூனு மாசம் கழிச்சி அதே பிளாட்டுகளை நாலு இலட்சம் அஞ்சு இலட்சம்னு விலை குறைப்பு செஞ்சு மீடியாக்கள்லே பில்டர்கள் விளம்பரம் பண்றாங்க. அப்பவும் விலைபோகலைங்கிறதுதான் இன்னைக்கு நிலைமை..

ஆனாலும் இந்த தொழில்ல யாருக்கு லாபம் கிடைச்சுதோ இல்லையோ வங்கிகள் ஏகத்துக்கும் வீட்டுக்கடனை கொடுத்து நோகாம கோடிக்கணக்கான வட்டியை சம்பாதிச்சுகிட்டு இருக்கு..அந்த காசு அவங்களுக்கு செரிக்காமுன்னுதான் தெரியலை!

Udhai Kumar