October 16, 2021

அட்டைகத்தி அரசியல்வாதிகளும் – அரிதாரம் பூசிய வியாதிகளும்!

இன்று சன்டே என்பதால் வழக்கம் போல தத்துபித்து – இன்று தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – “அட்டைகத்தி அரசியல்வாதிகளும் – அரிதாரம் பூசிய அரசியலுக்கு வரப்போகும் வியாதிகளும்…….”கத்தி பிரச்சினை – மழை விட்டாலும் தூவானம் விடுவதாயில்லை – நேற்று போஸ்ட்டில் கூறியிருந்தேன் இந்த படத்தில் ரிஷிமூலம் – நதிமூலம் யாருன்னு……….அதுக்கு முன்னாள் இங்கு சிலர் கொக்கோ கோலா – பெப்ஸி விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் எப்படி இந்த படத்தில் வசனம் கூறலாம் என கேட்டிருந்தனர்…….தவறில்லை அது அவர்களின் அறியாமையை உணராமல் வந்த சொல்லாக கூட இருக்கலாம் என்பதே உண்மை.
ravi oct 26
அரிதாரம் பூசினவர்கள் தான் இந்த நாட்டின் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும் என்பது எத்தகைய கேவலம்…….. அரிதாரம் பூசியவர்கள் காசுக்காக தெருவில் சட்டை இல்லாமல் கூட நடிப்பார்கள் ஏன் கமல் போன்ற நடிகர்கள் நிர்வானமாய் கூட நடித்தது இல்லையா….. ஆனால் நீங்கள் கோடி கொடுத்தாலும் அத்தகைய செயலை செய்வீர்களா? அல்லது உங்களுடைய குடும்பத்தின் அங்கத்தினர் ஒருவரை கிழிஞ்ச கால் டிராயரும் – எல்லா பொத்தானையும் அவிழ்த்து உள்ளாடை தெரியும் அளவுக்கு கம்பத்தை சுற்றி டூயட் பாட வைப்பீர்களா?

என்ன ஒரு மடமைத்தனம்? ஏன் அடுத்த வரும் முதலைமைச்சரும் இத்தகைய சினிமாவை சார்ந்தவர் தான் வர வேண்டும் என நாம் நினைப்பது என்ன ஒரு கையாலகாத்தனம். அரிதாரம் பூசியவர்களின் அடுத்த பிரவேசம் அரசியல் தான் என்றால், அத்தைகைய ஆட்கள் ஒரு பிரச்சினைக்கு அட்டை கத்தியை தவிர வேறு என்ன கையில் எடுப்பார்கள்? மாற்றம் நம்மிடம் தான் வேண்டும் – கோலா குடிப்பதை நீங்கள் நிறுத்தினால் ஏன் ஐயா அவன் விக்க இந்தியாவுல கடை போடப்போறான்…..

இளனி விக்கிறவன் என்னைக்கும் அதே பிளாட்பாரத்தில் தானே தன் ஜீவனத்தை நடத்துக்கிறான்? என்னைக்காவது குளிர் செயபட்ட ஒரு கடையில் இளனியோ பதனியோ விற்றது கண்டது உண்டா? எத்தனை பேர் இன்னும் உடலுக்கு ஆரோக்யமான பதனி / நுங்கை காலையில் இருந்து மதியம் வரை சைக்கில்ல நின்னு விக்கிறவன் கிட்ட வாங்கி குடிச்சிருக்கீங்க? இன்னைக்கு ஒரு உண்மை சொல்றேன் கேட்டுக்கோங்க – கொக்கோ கோலோவோ – பெப்ஸியோ இந்தியாவில் ஒரு தொழிற்ச்சாலை கூட வைத்திருக்கவில்லை – அனைத்து பாட்லிங் கான்ட்ராக்டர்ஸ் தான் – இந்த தொழிற்ச்சாலையை நடத்துவது அமெரிக்கனோ -ஆஃப்ரிக்கனோ இல்லை நம்மின் ஒருவராய் இருக்கும் ஒரு அண்ணாச்சியோ அல்லது பஜன்லால் சேட்டு இல்லைனா ஒரு லால்குட்டன் தான். நாம் தான் அவனுக்கு நம் மண்ணின் ஈரத்தை பிழிந்து எடுத்து கொடுத்து ஒரு பாட்டிலுக்கு சுமார் 87 காசு லாபம் பார்க்கிறார்கள்.

இதில் விஜய் என்ன விதிவிலக்கு………….கேரளா முல்லை பெரியார் பிரச்சினையின் போது தாய் பாசத்தோடு மலபார் நகை விளம்பரத்தில் நடிக்க வில்லையா – அப்ப ஏன்யா கொடி பிடிக்கலை – ஷோபா கல்யான மன்டபத்தில ஏதாவது ஒரு விவசாயின் திருமணம் இலவசமா நடந்திருக்கா – அங்கே யார் கல்யாணம் செய்தாலும் குடிக்க / குண்டி கழுவும் தண்ணிக்கு கூட காசு தானே வாங்குறாங்க விஜய் குடும்பத்தினர் – என்னைக்காவது ஒரு விவசாயி போராட்டதுல கொடி பிடிச்சாரா — இல்லை நம்மாழ்வார் சாவுல ஒரு மலர் வளையம் தான் வச்சாரா – மீடியா சங்கமிக்கும் ஹசாரேல இருந்து லோக்கல் மோடி விஸிட் வரை போய் போஸ் கொடுக்கும் நடிகர் ஒருவர் நம் பிரச்சினைக்கு முட்டு கொடுப்பார்னு நினைப்பது முட்டு சந்துல மோட்டர் பைக் ஸ்டன்ட் செய்த கதை தான்… விக்ரம் கையில இருக்கு கவலை ஏன்டா சிங்கம்னு ஒரு மீட்டர் வட்டி தங்க நிறுவனத்தை ரெகமென்ட் செய்த போது நாம் விக்டிம் ஆகவில்லையா – காபி டி குடிக்காதீங்க அது உடம்புக்கு நல்லது – என் இளமையை பார்த்து கற்று கொள்ளுங்கள்னு சிவக்குமார் மேடை மேடையா சொல்லும் வீட்டில் இருந்து தானே அப்பவா புரிஞ்சுக்க ப்ரூ குடி / பொன்டாட்டியை புரிஞ்சிக்க சன்ரைஸ் குடின்னு சொல்லும் ரென்டு மகனும் / மருமகளும் அதே வீட்டில் உள்ளவர்கள் தானே…………..!??

என்னய்யா உங்க நியாயம்…உண்மையிலே இந்த படம் தடுக்கபட்டிருக்கனும்னா என்னா செஞ்சிருக்கனும் – ஒரு லோக்கல் கோர்ட்ல ஸ்டே போட்டாலே போதும் அதை எவனாவது செய்தானா – நான் தடுக்கிற மாதிரி தடுக்கிறேன் நீ போராளியா ஆக்டு கொடு – பொட்டி மாறினா உடனே பேரை தூக்குறோம் – மோரை தூக்குறோம்னு அல்வா கொடுத்து கொடுத்து தானேயா ஒரு இனத்தையே அழிச்சானுவ – பாதி போராளிகள் மிச்ச பேர் அங்க போய் வடை பாயாசத்தோடு உணவருந்திவிட்டு இங்கு வந்து இலங்கை ராஜபக்க்ஷே ஒழிகன்னு அங்க சாப்பிட்ட விசுவாச ஏப்பத்தை புரட்சி நீங்க நினைச்சு ஏமாந்தது போதும்யா – நமக்கும் வெக்கமில்லை இந்த புலம் பெயர்ந்த இலங்கை மக்களுக்கு வெக்கமில்லை – காட்டி கொடுத்த கருணா ஒரு வகையில் ஜென்டில்மேன் – ஆனா இன்னும் காவடி தூக்கும் அல்லகை இலங்கை தமிழர் இருக்கும் வரை அந்த மக்களுக்கு நாம தான் பல கரூணாஸ்

தயவு செய்து இந்த அட்டை கத்தி அரசியல் வாதிகளோ அல்லது அரிதாரம் பூசிய அரசியலுக்கு வந்த வரப்போகும் வியாதிகளுக்கோ என்றும் கொடி பிடிக்காதீர்கள் – அது நம்மின் மூஞ்சியில் நாமே எச்சில் துப்புவதற்க்கு சமம்………..எங்காவது ஒரு இலங்கை தமிழர்களுக்காக இந்த அட்டை கத்தி வீரர்களோ அல்லது அரிதாரம் பூசியவர்களோ ஒப்பாரி வைத்தால் அது கண்டிப்பாய் ஒப்பனை இல்லாத ஒப்புக்கு சப்பான் ஒப்பாரி என அறிந்து தெளிவு பெருக……. அருமையான ஞாயிறு உரித்தாகட்டும்..

நன்றியுடன் – ரவி நாகராஜன்.