October 16, 2021

அஞ்சலி பாப்பா @ ஷாமிலி ஹீரோயின் பராக்.. பராக்!

‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி (நடிகை ஷாலினியின் தங்கை) ‘துர்கா,’ ‘தைப்பூசம்,’ ‘எங்க பாப்பா’ உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ‘ஓய்’ என்ற தெலுங்கு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்த அவர், அப்புறம் சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து, ‘விசுவல் கம்யூனிகேஷன்’ படித்து பட்டதாரி ஆனார். அதையடுத்து, சிங்கப்பூரில் உள்ள திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சியை பெற்றவர்.
shamili
பின்னர் இயக்கம், திரைப்பட வர்த்தகம், தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படிப்பில் சேர்ந்திருந்தார். இதற்காக சிங்கப்பூர் சென்ரிருந்தவர். அந்த கோர்ஸ் முடிந்து சென்னை திரும்பி விட்டாராம்.

‘ஷாமிலிக்கு நடிப்புதான் முக்கியம். டைரக்ஷனுக்கு இரண்டாவது இடம்தான். சென்னை திரும்பியதும் தொடர்ந்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். எதிர்காலத்தில் படம் இயக்கும் விருப்பம் அவருக்கு உள்ளது’ என ஷாமிலிக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர். இதனிடையே இப்போது அவர் நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால், தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க தயாராம்!