September 25, 2021

அஜீத்-தின் ’என்னை அறிந்தால்’ பொங்கல் ரிலீஸ்!

அஜீத், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் பொங்கலன்று ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ajith e a
மேலும், என்னை அறிந்தால்’ டீசர் நவம்பர் 27ஆம் தேதியும், ஆடியோ வெளியீடு டிசம்பர் 11ஆம் தேதியும், டிரைலர் ரிலீஸ் ஜனவரி 1ஆம் தேதி, பட ரிலீஸ் ஜனவரி 15ஆம் தேதியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் 2014 அன்று ‘வீரம்’ வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தது போலவே, இந்தப் பொங்கலுக்கு ‘என்னை அறிந்தால்’ வெளிவருவது தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது

ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு டான் மெக்ரதூர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணியை அந்தோணி விறுவிறுப்பாக செய்து வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இந்த படத்தின் ஆடியோ உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்:http://jannalmedia.com/dpages.php?id=2612