October 19, 2021

அஜித்- தின் ‘உன்னை அறிந்தால்’!

அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.இந்தப் படத்திற்கு பெயர் வைக்காமல், முதலில் படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்று தீவிரம் காட்டினார்கள். தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியிருக்கிறார்கள்.இந்நிலையில், “படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் போஸ்டர் டிசைன் ஆகியவை நேற்று வெளியாகும்” என்று அறிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் #MakeWayForTHALA55TitleWithFL என்ற டேக் தயார் செய்து, அதில் தங்களது எதிர்ப்பார்ப்பை பகிர்ந்து வந்தார்கள்.சரியாக இரவு 12 மணிக்கு படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’ என்று அறிவிக்கப்பட்டது.
ajith movie
அதனைத் தொடர்ந்து படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியீடு எப்போது என்பதற்கு #yennaiarindhaalposterrelease என்ற டேக் தயார் செய்து ட்ரெண்ட் செய்து வந்தார்கள். பகல் 1 மணிக்கு அதிகாரப்பூர்வ போஸ்டர் டிசைன் வெளியிடப்பட்டது.
படத்தின் தலைப்பு, போஸ்டர் என ஒரே நாளில் வெளியானதால், ட்விட்டர் தளத்தில் அஜித் ரசிகர்களிடையே உற்சாகம் காணப்பட்டது. இந்தியளவில் ட்விட்டர் தளத்தில் #YennaiArindhaal என்ற டேக் முதல் இடத்தில் இருக்கிறது.

இதனிடையே இந்த படத்தில் அஜித்திற்கு இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள்.இதுவரை அவர்கள் வில்லன்களாக நடித்திருக்கக் கூடாது எனவும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக அமைய வேண்டும் என்பதிலும் படக்குழு தெளிவாக இருந்தது . படத்தின் வில்லன்களாக அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் இருவரும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இவர்கள் இதுவரை நாயகனாக நடித்து வந்தவர்கள், அஜித் படம் மற்றும் கதையில் வில்லன்களின் பங்கு என்ன என்பதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள் என்பது அடிசினல் தகவல்.