October 20, 2021

அச்சச்சோ.. ஒபாமா விசிட் செலவு கான்பிடன்ஷியல்! – மத்திய அரசு தகவல்

அமெரிக்கா அதிபர் ஒபாமா கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்த போது போது செலவிட்ட தொகை பற்றிய விவரங்களை தெரிவிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
INDIA-US-DIPLOMACY
மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி ஒபாமாவுக்கு செலவிட்ட தொகை எவ்வளவு என வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கேட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள வெளியுறவு துறை அதிகாரி ரோகித் ரத்தீஷ் ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டு அரசு விருந்தினர்கள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். தலைவர்களின் பயண நோக்கம் மற்றும் பயணம் செய்யும் இடங்களை பொருத்து ஒவ்வொருவருக்கும் செலவு தொகை வேறுபடும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான விவரங்களை வெளியிட்டால் குறிப்பிட்ட நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்று ரோகித் ரத்தீஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அனில் தனது மனுவில், “அரசு தானாகவே முன் வந்து இத்தகைய செலவினங்கள் குறித்த தகவலை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். ஏனெனில் அது மக்கள் பணம்” என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது..