October 18, 2021

அச்சச்சோ..உங்க கையிலே இருக்கற ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நம்பாதீங்க!

இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கவும், கள்ள நோட்டுகள் புழங்கவதை தடுக்கவும் ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அடுத்த வருடம், சந்தையில் அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் துவங்கியுள்ள நிலையில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விதமாக இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படும் வெள்ளி நூல் இல்லாமல், 5AG, 3AP வரிசையில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. இதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
fake note
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ரூபாய் நோட்டு அச்சக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில், பாதுகாப்பு அம்சம் இல்லாத ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், 5AG, 3AP வரிசையில் உள்ள 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 5AG, 3AP வரிசை நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வணிக வங்கிகளுக்கு அதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், மத்திய பிரதேசம், ஹோஷன்காபாத்தில் உள்ள Security Printing and Minting கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, பின்பு நாசிக்கில் உள்ள ஆர்பிஐ அச்சகத்திற்குக் கொண்டு வரப்படும். இந்நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி SPMCIL அச்சகத்தின் நிர்வாக இயக்குநருக்கு ஆர்.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. SPMCIL அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் “ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுக்களில் சில்வர் நிற பாதுகாப்பு இழை, நீர் குறியீடு என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாகவே ரூபாய் நோட்டுக்கள் பிரத்யேகமான காகிதத்தில் தயாராவதால், அதன் தரத்தை தொட்டுப்பார்த்து உணரலாம். புற ஊதா விளக்கொளியில் ஜொலிக்கும் மையினால் நோட்டு அச்சிடப்பட்டிருக்கும். தற்போது அச்சடிக்கப்பட்ட ரூ.1000 நோட்டு மேற்கண்ட விதத்தில் பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், அதில் சில்வர் நிற பாதுகாப்பு இழை மட்டும் தவறுதலாக விடுபட்டிருக்கும்.ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய தாள்களில் பார்க்கத்தக்க, ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட சில்வர் நிற பாதுகாப்பு இழை இருக்கும். ரூ.100, ரூ.500 நோட்டில் இந்த பாதுகாப்பு இழை பாதி வெளியில் தெரிவதாகவும், பாதி உள்ளே பதிக்கப்பட்டதாகவும் இருக்கும். ரூ.1,000 நோட்டு தவிர மற்றவற்றில் இந்த இழையில் ‘பாரத்’என தேவநாகரி எழுத்து வடிவத்திலும் ‘ஆர்பிஐ’ எனவும் மாறி மாறி அச்சிடப்பட்டிருக்கும். ரூ.1,000 பணத்தாளில் உள்ள இந்த பாதுகாப்பு இழையில் ‘பாரத்’ என தேவநாகரி எழுத்திலும், ‘1000’, ‘ஆர்பிஐ’ என்பனவும் இருக்கும். மகாத்மா காந்தி வரிசை தாள்களில் இந்த அம்சம் காணப்படும்.” என்று விளக்கம் அளித்துள்ளனர்