October 19, 2021

அக். 7 முதல் பயணிகள் ரயில் கட்டணம் 2 – 3 சதவீதம் அதிகரிக்க முடிவு!

பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 3 சதவீதம் வரை பயணிகள் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 - cow in train
எரிபொருள் விலை உயர்வு, பிற செலவின நிலவரத்துக்கு ஏற்ப 6 மாதத்துக்கு ஒரு முறை பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு கட்டணமும் உயர்த்த திட்டம் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் கடந்த 1 ஆம் தேதி முதல் 15 சதவீத சரக்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

இதனிடையே, டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, ”பட்ஜெட்டில் எரிபொருள் விலை நிலவரத்துக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை மாற்றி அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி பயணிகள் கட்டணத்தை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பான கோப்பு என்னிடம் வந்துள்ளது. நான் அதை பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.

இந்நிலையில் பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வு வருகிற 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்றும் ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Railways to increase passenger train fares by 2-3 per cent from Oct 7
**************************************************************
The Indian Railways is likely to revise passenger fares by 2-3 per cent from October 7. According to the Railways fuel adjustment component will be added to the ticket fare. Railway Minister Mallikarjun Kharge on Thursday said that he was examining a proposal to increase rail fare adding that the decision will be taken shortly.