September 20, 2021

அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நிபந்தனை ஜாமீன்!

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஏற்கனவே 2 முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
agri kicca
இந்த நிலையில் அவர், 3–வது முறையாக ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் வழங்க சி.பி.சி.ஐ.டி. சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி ஜாமீன் வழக்கை இன்று தள்ளி வைத்தார்.

அதன்படி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான ஜாமீன் வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் கிருஷ்ணமூர்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி தினமும் சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.